கூட்டநெரிசலில் தவறி கீழே விழுந்த பவுன்சர்.. பதறிய நயன்தாரா.. இதுதாங்க உங்க ரசிகர் வட்டத்தோட சீக்ரெட்!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு நேற்று முன்தினம் மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Pressmeet After Marriage *Celebrity

இதையடுத்து இன்றைய தினம் அவர்கள் இருவரும் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இருவரும் தங்களது திருமணம் மற்றும் அதற்கான ஒத்துழைப்பு போன்றவற்றிற்காக நன்றி தெரிவித்தனர்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாராவுக்கு நேற்று முன்தினம் மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். மிகவும் சிறப்பான முறையில் தடபுடலான விருந்துடன் திருமணம் இனிதாக நடைபெற்றது. 20 புரோகிதர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

சிறப்பாக நடந்த திருமணம்

சிறப்பாக நடந்த திருமணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார். திருமணத்தில் ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர்கள் அட்லி, கேஎஸ் ரவிக்குமார், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் ஓடிடியில் வீடியோ

விரைவில் ஓடிடியில் வீடியோ

இந்த திருமணம் சிறப்பான வகையில் வீடியோவாக எடுக்கப்பட்டு, நெட்பிளிக்சில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்ற இந்த ஜோடி சாமி தரிசனம் செய்தது. கூடவே சர்ச்சையையும் எடுத்து வந்தது.

செய்தியாளர்களுக்கு நன்றி

செய்தியாளர்களுக்கு நன்றி

திருப்பதி வளாகத்தில் அத்துமீறி போட்டோஷுட், வளாகத்தில் காலணி அணிந்திருந்தது என தேவஸ்தானம் விக்னேஷ் சிவன் -நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து இந்த ஜோடி தங்களது நன்றியை தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு முதல் பேட்டி

திருமணத்திற்கு பிறகு முதல் பேட்டி

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள இந்தப் பேட்டி மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது தங்களது திருமணம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த பத்திரிகையாளர்களுக்கு இருவரும் இணைந்து நன்றி தெரிவித்தனர்.

கீழே விழுந்த பவுன்சர்.. பதறிய நயன்தாரா

கீழே விழுந்த பவுன்சர்.. பதறிய நயன்தாரா

முன்னதாக பத்திரிகையாளர்களை சந்திக்க மேடையை நோக்கி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வந்தபோது, கூட்டநெரிசலில் அங்கு பாதுகாப்பில் இருந்த பவுன்சர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதையடுதது நயன்தாரா பதறிவிட்டார். இதையடுத்து மற்றவர்கள் உதவியுடன் அவர் சுதாரித்து எழுந்தார்.

லேடி சூப்பர்ஸ்டார் என்ற பாராட்டுக்கு உள்ளானாலும் எப்போதுமே தன்னுடைய புன்னகை மற்றும் எளிமையை விட்டுத்தாராமல் இருப்பவர் நயன்தாரா. இந்த ரகசியமே அவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கிடைக்க காரணமாக அமைந்துள்ளது. அதை அப்படியே அவர் மெயின்டெயின் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X