Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
காதல் ரசம் சொட்ட சொட்ட.. இன்டர்நெட்டை தெறிக்கவிடும் விக்கி - நயன் ரொமான்டிக் போட்டோ!
கோவா: இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலி நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை ரொமான்ட்டிக்காக கொண்டாடி வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் விக்னேஷ் சிவன்.
ஹேப்பி
பர்த்டே
விக்னேஷ்
சிவன்..
நயன்தாரா
உடன்
நானும்
ரவுடி
தான்
இயக்குநரின்
அழகான
காதல்
தருணங்கள்!

பாடலாசிரியர்
பின்னர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். காதல் கலந்த காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் வலம் வருகிறார் விக்னேஷ் சிவன்.

லிவிங் டூ கேதர்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வரும் அவர்கள் லாக்டவுன் காரணமாக இத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

ஓணம் கொண்டாட்டம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் வெளியே கிளம்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்காக நயன்தாராவுடன் தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி சென்றார் விக்னேஷ் சிவன். இருவரும் ஒன்றாக ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் வைரலானது.

கோவாவில் விடுமுறை
இதனை தொடர்ந்து தற்போது இருவரும் கோவாவில் விடுமுறையை கழித்து வருகின்றனர். நீச்சல் குளத்தின் அருகில் நயன்தாரா நின்று கொண்டிருக்கும் போட்டோவை முதலில் ஷேர் செய்த விக்னேஷ் சிவன் கோவாவில் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

ரசித்து ரசித்து..
அதன் பிறகு நயன்தாரா வெள்ளை நிற நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோக்கள் வெளியாயின. கோவாவில் அவர்கள் தங்கியிருந்த பிரைவேட் ஹவுஸின் தோட்டத்தில் இருந்த பூக்களை நயன்தாரா பறித்ததை ரசித்து ரசித்து போட்டோ எடுத்திருந்தார் விக்கி.

கண்களாலேயே பேசி..
அந்த போட்டோக்களும் இணையத்தை கலக்கின. இந்நிலையில் கோவா ரெசார்ட்டில் தனது பிறந்த நாளை நயன்தாராவுடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன். இருவரும் வீட்டின் வாசற்படியில் நின்றப்படி நீச்சல் குளத்தின் பக்கம் திரும்பியப்படி ஒருவரை அணைத்தப்படி கண்களாலேயே பேசிக் கொள்கின்றனர்.

பிறந்த நாள் வைப்ஸ்?
இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த விக்னேஷ் சிவன், பிறந்தநாள் வைப்ஸ்????? கடவுளின் அருள் மற்றும் உங்கள் அற்புதமான இனிய வாழ்த்துக்கள்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நடிகை சமந்தா, விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெறிக்கும் இணையம்
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்யும் இந்த போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
Recommended Video

காதல் போட்டோ
இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாள் என்றதுமே ரசிகர்கள் காலை முதல் இதுபோன்று ஏதாவது ஒரு ரொமான்ட்டிக் போட்டோ இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த காதல் போட்டோ வெளியாகியுள்ளது.