ரசிகர்களுடன் படம் பார்த்த விக்னேஷ் சிவன்... என்னது டான்சும் ஆடியிருக்காரா!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வரவேற்பை பெற்றுள்ளன.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றிய நிலையில், படம் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தில் கதீஜாவாக நடித்துள்ள சமந்தா ரசிகர்களின் பாராட்டை அதிகமாக பெற்றுள்ளார்.

2வது முறையாக இணைந்த கூட்டணி

2வது முறையாக இணைந்த கூட்டணி

படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கிய பின்பே வெளியாகியுள்ளது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின்பு விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

திரையரங்கில் படம்பார்த்த குழு

திரையரங்கில் படம்பார்த்த குழு

திரையரங்குகளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் படத்தை ரசிகர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பார்த்துள்ளனர். ரசிகர்களுடன் செல்பி எடுத்தும் மற்றும் அவர்களின் உற்சாகத்தில் பங்கேற்றும் உள்ளனர்.

நடனமாடிய விக்னேஷ் சிவன்

ரசிகர்களில் சிலர் திரையரங்கில் படத்தின் பாடல்களுடன் நடனமாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர் சில ஸ்டெப்சே போட்டிருந்தாலும் சிறப்பாக காணப்படுகிறது.

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

அடுத்தடுத்த சிறப்பான திரைக்கதையுடன் படங்களை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். தற்போது அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் அப்டேட்களை வெளியிட உள்ளார்.

அப்டேட் வெளியிடுவாரா?

அப்டேட் வெளியிடுவாரா?

இன்றைய தினம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுவாரா என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித்தின் ஏகே61, ஏகே62 மற்றும் ஏகே63 ஆகிய படங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X