அம்மாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி..இன்ஸ்டாவில் உருகிய விக்னேஷ் சிவன்!

சென்னை : நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை துபாயில் கொண்டாடிய நிலையில்,அம்மாவுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து பாசமழையில் நம்மை நனையவைத்துள்ளார்.

சிம்புவின் போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன், வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, விஜய்சேதுபதி, நயன்தாரா வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நானும் ரவுடி படத்தை காமெடி ஜனரில் கலகலப்பான படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா மனதிலும் இடம் பிடித்தார். அடுத்தடுத்து காதல், அந்த காதலும் கைகூடாததால் மனதளவில் துவண்டு இருந்த நயன்தாராவுக்கு நம்பிக்கையும் கொடுத்து, அன்பான காதலையும் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார்.

7 ஆண்டுகாதல்

7 ஆண்டுகாதல்

நம்பிக்கையும், காதலும் கைகூடி இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து இந்த ஆண்டு கடைசியில் திருமணம் செய்து கொண்டு செம ஜாலியாக தாய்லாந்து, பிரான்ஸ், துபாய் என வெளிநாட்டில் டேரா போட்டு வருகின்றனர். கடந்த வாரம் விக்னேஷ் சிவன் தனது 36வது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடினார். துபாயில் உள்ள வெட்டவெளி பகுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலானது.

அம்மா முகத்தில் மகிழ்ச்சி

அம்மா முகத்தில் மகிழ்ச்சி

இந்நிலையில்,விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அம்மாவுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து பாசமழையில் நம்மை நனையவைத்துள்ளார். அதில், என் அம்மாவை வெளியூருக்கு அழைத்துச் செல்வதும், உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களைப் பார்க்கும் போது அவள் முகம் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளது.

மனதில் பசுமையாக இருக்கும்

மனதில் பசுமையாக இருக்கும்

அம்மா முகத்தில் நான் தேடும் மகிழ்ச்சி இதுதான். சாதனை உணர்வு, நான் செய்யும் அனைத்து கடின உழைப்புக்கும் அர்த்தம் தருகிறது. வாழ்க்கை எனக்கு வழங்கிய அனைத்து நல்ல விஷயங்களுக்கும் நன்றி. இந்த ஆண்டு எனது பிறந்தநாளை எனது குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்ற நாட்கள் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

8வது முறையாக பிறந்தநாள்

8வது முறையாக பிறந்தநாள்

அதுமட்டும் இல்லாமல், நயன்தாராவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த விக்கி, நயன்தாராவுடன் நான் 8வது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் தங்கமே உனக்கு எனது நன்றி! ஒவ்வொரு பிறந்த நாளையும் முந்தைய பிறந்தநாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய். ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது. உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி. நீ என்னை நேசிக்கும் விதம் என்னை மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X