விக்னேஷ் சிவனின் அதிரடி முடிவு.. டிவிட்டர் கணக்கை டெலிட் செய்ததால் அதிர்ச்சி.. என்ன காரணம்?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி லீட் கேரக்டர்களில் நடித்துவரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் கோடை கொண்டாட்டமாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.
படத்தில் எதிர்காலத்தை காட்டும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதாக விக்னேஷ் சிவன் பேட்டியொன்றில் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணையவிருந்ததாகவும் படத்தின் பட்ஜெட் காரணமாக இந்தப் படத்திலிருந்து தயாரிப்பாளர் விலகியதால் புதிய கூட்டணியில் தானே இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LIK படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை இயக்கி தானே தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன். எதிர்காலத்தில் நடைபெறும் வகையிலான கதைகளத்தை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன்: இதனிடையே முன்னதாக இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும் பட்ஜெட் காரணமாக இந்த படத்தின் கதைகளத்தை தயாரிப்பாளர் மாற்ற சொன்னதால் அதில் விருப்பம் இல்லாமல் தான் இந்த படத்தை புதிய கூட்டணியில் உருவாக்கி வருவதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். முன்னதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அஜித்தை வைத்து தான் காமெடி ட்ராக்கில் படமியக்க திட்டமிட்டதாகவும் அதனால் அந்தப் படம் ட்ராப் ஆனதாகவும் விக்னேஷ் சிவன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்: இந்நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை தற்போது டெலிட் செய்துள்ளார். அடுத்தடுத்து instagram மற்றும் twitter பக்கங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த விக்னேஷ் சிவன் தற்போது twitter பக்கத்தை டெலிட் செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் திருமணக் காட்சிகளை கொண்ட ஆவணப்படம் வெளியானது. இதில் தங்களது காதல் முதல் கல்யாணம் வரையிலான பல விஷயங்களை இந்த ஜோடி பகிர்ந்திருந்தது. இவர்களின் காதலுக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்த தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் இவர்கள் இடம்பெற செய்திருந்தனர்.
என்ன காரணம்?: இந்த விவகாரத்தில் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து முன்னதாக கேள்வி எழுப்பி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த விக்னேஷ் சிவன், ஒரு கட்டத்தில் அதை டெலிட் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் காரணமாக தான் விக்னேஷ் சிவன் தன்னுடைய twitter பக்கத்தை தற்போது டெலிட் செய்தாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்தடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை அவர் எதிர்கொண்டு வருவதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











