சிம்பு என்னை ரொம்பவே நம்பினார்.. நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: விக்னேஷ் சிவன் இள வயதிலேயே சென்சேஷனல் இயக்குநராக மாறியவர். நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் நயனுக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிய அவர் அதில் தோல்வியை சந்தித்தார். இப்போது பிரதீப் ஆண்டனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரை வைத்து எல்ஐசி படத்தை இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் நடிகர் சிம்பு குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது பெயர்களை சமீபத்தில்தான் நயன்தாரா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
காத்து வாக்குல ரெண்டு காதல்: இதற்கிடையே இருவரது திருமணம் நடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், விக்னேஷ் சிவன் மேக்கிங் சுத்தமாக எடுபடவில்லை என்றும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே கூறினர். இதனையடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து விக்கி வெளியேறினார்.
எல்ஐசி: இந்தச் சூழலில் எல்ஐசி என்ற படத்தை தற்போது அவர் இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் விக்னேஷ் தெளிவாக இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் பேட்டி: இந்நிலையில் அவர் சிம்பு குறித்து அளித்த ஒரு பேட்டியில், "சிம்புவிடம் போடா போடி கதையை 2008ஆம் ஆண்டு சொன்னேன். அந்தக் கதை சிம்புவுக்கு பிடித்தது. ஆனால் அப்போது அவர் சில படங்களில் பிஸியாக இருந்தார். இதனால் போடா போடி படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானது. அந்த சமயத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி நல்ல ஹிட்டடித்தது.
நம்பிக்கை இருக்கு: அந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே சிம்பு என்னை அழைத்து போடா போடி ஷூட்டிங்கை தொடங்க சொன்னார். அப்போது, நான் சமீபகாலமாக நிறையவே ரொமாண்ட்டிக் படங்களில் நடித்துவருகிறேன். இருந்தாலும் உன் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படமாக போடா போடி எனக்கு அமையும். அதுமட்டுமில்லாமல் உனது டைரக்ஷனில் நடிக்கிறேன் என்று வாக்கும் கொடுத்திருக்கிறேன். வா பண்ணலாம் என்று நம்பிக்கையாக கூறினார். அவர் என் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











