புடிக்கலையா தள்ளிக்கோங்க.. தனுஷ் சொன்னது.. ஆனால் குடைச்சல் கொடுக்கிறார்.. விக்னேஷ் சிவன் காட்டம்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த 2022 ம் ஆண்டில் நடந்த நிலையில் அப்போதே அவர்களின் திருமண வீடியோ ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் பல கோடிகளுக்கு அதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் 18ம் தேதி நெட்பிளிக்சில் இந்த திருமண வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவிற்கான அடுத்தடுத்து ட்ரெயிலர், பிரமோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில தினங்களில் வெளியிட்டது. இதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதலுக்கு அஸ்திவாரம் போட்ட நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. 3 வினாடிகள் மட்டுமே வரும் இந்த காட்சிகளுக்காக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தற்போது நயன்தாரா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து இவரது சினிமா பயணம் சிறப்பாக தொடர்ந்து வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்திருந்தார் நயன்தாரா. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
நயன் & விக்கி திருமணம்: இந்த திருமணத்தின் கொண்டாட்டங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய்கள் கைமாறியதாகவும் கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த வீடியோ நெட்பிளிக்சில் வெளியாகாத நிலை காணப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த வீடியோ beyond the fairytale என்ற டாகுமெண்டரியாக வரும் 18ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவிற்கு திருமணமாகி வாடகைத்தாய் முறையில் அவர் இரு குழந்தைகளுக்கும் தாயான நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த டாகுமெண்டரி வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது பல்வேறு தரப்பினரிடையேயும் கேள்விகளை எழுப்பியது.
தனுஷ் மீது நயன்தாரா காட்டம்: இதனிடையே இந்த ஆவணப்படத்தையொட்டி முன்னதாக இதன் ட்ரெயிலர், பிரமோ வீடியோக்கள் வெளியாகின. இதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் அரும்ப காரணமான நானும் ரவுடிதான் படத்தின் 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இதையொட்டி படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக நயன்தாரா தற்போது தன்னுடைய கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவையனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நயன்தாரா பொங்கியுள்ளார். மேலும் இந்த காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்த NOC கொடுக்க தனுஷ் இரண்டு ஆண்டுகளாக தங்களை அலைக்கழித்ததாகவும் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனும் கடுப்பு: 3 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இதையடுத்து அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் தனுஷின் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனுஷ், வாழு அல்லது வாழவிடு என்று பேசியுள்ளார். தொடர்ந்து தனுஷை அப்பாவித்தனமாக நம்பும் அவரது ரசிகர்களுக்காகவாவது மற்றவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்காக இவர்கள் மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











