Vignesh shivan: அதை மட்டும் மறக்க மாட்டேன்.. டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயோடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிராகன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் கல்லூரி மாணவராக பிரதீப் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் பாடல்கள், டிரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் நேற்றைய தினம் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர், இயக்குநர் என இருவேறு தளங்களில் சிறப்பாக பயணித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகன், காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இவரது இயக்கத்தில் வெளியான கோமாளி படம் மிகச்சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் லவ் டுடே என்ற படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்த நிலையில், இவரது மார்க்கெட் வேல்யூவும் உயர்ந்தது. இந்தப் படத்தில் காதலர்களுக்கிடையிலான ஈகோவை மையப்படுத்தி கதைக்களத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
டிராகன் படம்: அடுத்ததாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து டிராகன் படத்தில் நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன், கயோடு லோஹர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகியுள்ளார். தான் பாசிட்டிவ்வான வில்லனாக படத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முன்னதாக படத்தின் பாடல்கள், டிரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு: இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். பிரதீப்பின் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இந்த நிகழ்ச்சியல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பான பேச்சை கொடுத்திருந்தார். பிரதீப் -விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகியுள்ள LIK படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் சிஜி வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது.
டிராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: இதனிடையே நேற்றைய தினம் டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், தான் தன்னுடைய சினிமா கேரியரில் மோசமான தருணத்தில் இருந்ததாகவும் அப்போது பிரதீப்பை சந்தித்து ஒரு கதையை சொன்னதாகவும் கூறியுள்ளார். அவர் உடனடியாக ஓகே சொன்னதாகவும் அப்படித்தான் LIK படம் சாத்தியமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிரதீப்பிற்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் அவர் தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











