எமோஷனலா 10 படம் பண்ணுவாரு... விஜய் சேதுபதி குறித்து விக்னேஷ் சிவன் குஷி!
சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது காத்து வாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா அவருடன் ஜோடி சேர்ந்துள்ளனர்.
விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் முதலில் நடித்திருந்தனர். இந்தப்படம் மூவருக்கும் சிறப்பான வகையில் கைகொடுத்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

காத்து வாக்குல 2 காதல் படம்
இந்த கூட்டணி தற்போது இணைந்து காத்து வாக்குல 2 காதல் என்ற படத்தை முடித்துள்ளது. இந்தப் படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

சிறப்பான பிரமோஷன்
இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் கேரக்டர்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.
Recommended Video

சிறந்த நட்பு
விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி இடையில் சிறப்பான நட்பு காணப்படுகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை பாராட்டித் தள்ளியுள்ளார்.

எமோஷனலாக 10 படங்கள்
படம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் கஷ்டப்படும் இயக்குனருக்காக அவர் படங்கள் நடிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமோஷனலாக 10 படங்கள் நடிக்கும் விஜய் சேதுபதி தனக்காக ஒரு படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
VijaySethuOffl sir always mass❤️ #humanity pic.twitter.com/FYTnifVcwd
— Akalya Venkatesan (iamakalya) December 9, 2021
டைரக்டராகும் சந்தோஷம்
இதன்மூலம் டைரக்டராகும் சந்தோஷத்தை ஒரு அறிமுக இயக்குனருக்கு அவர் கொடுப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











