அனிருத் பாட்டை கொண்டாடிய நயன்தாரா குட்டீஸ்.. கூட சேர்ந்து பாடற அளவுக்கு வளர்ந்துட்டாங்களே!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் உள்ள நிலையில் அவர்களை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் இவர்கள் இருவரும் மிகவும் சிறப்பாக வளர்ந்துள்ளனர். இவர்களுடன் இணைந்தும் தனியாகவும் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வரும் நிலையில், விகனேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் உருவாகிவருகிறது. படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரீத்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Nayanthara Vignesh shivan Uyir amp amp Ulag

நயன்தாரா & விக்னேஷ் சிவன்: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெறறோர் ஆகியுள்ளனர். எங்கு சென்றாலும் தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக்குடன் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமிலும் இருவரும் ஆக்டிவாக உள்ள நிலையில் அடுத்தடுத்த போஸ்ட்களால் ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகின்றனர். இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் லட்சக்கணக்கான பாலோயர்களால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவன் பல ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக காணப்படுகிறார்.

விக்னேஷ் சிவன் பதிவு: ஆனாலும் விக்னேஷ் சிவன் தனியாக இருக்கும் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர்வதில்லை. மாறாக நயன்தாராவுடன் இருக்கும்படியான மற்றும் தன்னுடைய மகன்களுடன் இருக்கும்படியான பதிவுகளைத்தான் அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். நயன்தாராவுடனான காதலின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில் தீமா தீமா பாடலுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் lip sync செய்திருந்தனர். இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

தேவரா பாட்டுக்கு கொண்டாட்டம்: இதனிடையே இன்றைய தினம் காரில் செல்லும்போது அனிருத் இசையில் வெளியான தேவரா படத்தின் பத்தவைக்கும் பாடலுக்கு உயிர் மற்றும் உலக் வைக் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் மடியில் அமர்ந்தபடி இந்தப் பாடலை கொண்டாடும் குட்டீஸ் பாடலை கூடவே சேர்ந்து பாடியதையும் பார்க்க முடிந்தது. மேலும் இசை தானே நமக்கு உயிர், உலகம் மற்றும் வாழ்க்கை எல்லாம் என்று அவர் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததும் ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து லைக்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சமந்தா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

மாஸ் காட்டும் உயிர் & உலக்: முன்னதாக நயன்தாராவின் பாடல் ஒன்றை டிவியில் பார்த்தபடி அதற்கு ரியாக்ட் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோவிலும் க்யூட்டான பாடலுக்கு க்யூட்டான ரியாக்ஷன்ஸ் செய்துள்ளனர் உயிர் மற்றும் உலக். அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இந்தப் படத்தில் அவர் இணைந்து நடித்துள்ளார். மேலும் மண்ணாங்கட்டி, ராக்காயி படங்களும் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ளன. இதனிடையே யஷ்ஷுடன் நயன்தாரா நடித்துள்ள டாக்சிக் படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X