சரவண பவன்ல நான்-வெஜ் கிடைக்காது... ஏகே62 குறித்து விக்னேஷ் சிவன் வேற லெவல் விளக்கம்!

சென்னை : இன்றைய தினம் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது அவர் ஐதராபாத்தில் ஏகே61 படத்தின் சூட்டிங்கில் உள்ளார். அவர் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவரும் நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் இணையவுள்ளார்.

அஜித் பிறந்தநாள்

அஜித் பிறந்தநாள்

நடிகர் அஜித்குமார் தனது 51வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் அஜித் தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் உள்ளார்.

துரிதப்படுத்தப்பட்ட சூட்டிங்

துரிதப்படுத்தப்பட்ட சூட்டிங்

ஹெச் வினோத் இயக்கிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்கும்வகையில் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

படம் தீபாவளி ரிலீசாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் முன்னதாக அறிவித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து ஏகே62 படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் செப்டம்பர் மாதத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகள் உழைப்பு

3 ஆண்டுகள் உழைப்பு

இந்த கதையை கடந்த 3 ஆண்டுகளாக தான் உருவாக்கி வந்ததாக முன்னதாக ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் பார்க்க வந்தால் அவர்களுக்கு சிறப்பான அனுபவம் காத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 சரவணபவனில் நான்-வெஜ் கிடைக்காது

சரவணபவனில் நான்-வெஜ் கிடைக்காது

இதுகுறித்து அவரது பேட்டியில், ஒரு படத்தை படமாக எதிர்கொண்டால் மட்டுமே அந்தப் படம் நிறைவான அனுபவத்தை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சரவண பவனில் நான் வெஜ் கிடைக்காது என்றும் அஞ்சப்பரில் நான் வெஜ்தான் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெஸ்ட்டை கொடுப்பேன்

பெஸ்ட்டை கொடுப்பேன்

அதேபோல, ஒரு படம் குறித்த எதிர்பார்ப்பை மனதில் பதிந்துக் கொள்ளாமல் திறந்த மனதுடன் படத்தை எதிர்கொண்டால் அனைத்து படங்களும் சிறப்பாகவே அமையும் என்றும் கூறியுள்ளார். அஜித் சாரின் படத்திற்காக தன்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 விக்னேஷ் சிவன் உற்சாகம்

விக்னேஷ் சிவன் உற்சாகம்

அஜித் சாருடன் 9 மணிமுதல் 6 மணிவரை இணைந்து பணிபுரிய உள்ளதே தனக்கு மிகச்சிறந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் இதை தான் என்ஜாய் செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அஜித் ரசிகர்கள், பொதுவான ரசிகர்கள் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய கடமையும் தனக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X