நயன்தாரா நான் சொன்னா கேட்க மாட்டாங்க... என்ன இப்படி சொல்லிட்டாரு விக்னேஷ் சிவன்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வித்தியாசமான காதலை என்டர்டெயின்மெண்ட் தூக்கலாக இந்தக் கதைக்களம் சொல்வதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் படம். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு காதல் மற்றும் இரண்டு பெண்களின் வரவு ஏற்படுத்தும் மாற்றத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் மற்றும் ப்ரமோக்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில் படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜாலியாக தியேட்டரில் சென்று ஒரு படத்தை பார்க்க வேண்டுமென்றால் இந்தப் படத்தை பார்க்கலாம் என்ற மனநிலை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ரசிகர்களுடன் படம் பார்த்த டீம்
இந்தப் படத்தை பிரமோட் செய்யும் வகையில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் இரு தினங்களுக்கு முன்பு திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தனர். விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே சென்று ரசிகர்களுடன் 2 2 பாடலுக்கு நடனமும் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

படம் குறித்து விக்னேஷ் சிவன்
இந்நிலையில் இந்தப் படம் ஒரு பீல் குட் படமாக ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற தனது முடிவையடுத்து உருவாகியுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்றுக் கொண்ட நடிகர்கள்
இந்தக் கதை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக இதன் நடிகர், நடிகைகளை முதலில் தான் ஏற்றுக் கொள்ள வைத்ததாகவும், படம் நல்ல கதையாக இல்லாத பட்சத்தில் அவர்களை தான் ஏற்றுக் கொள்ள வைத்திருக்க முடியாது என்றும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா என்னோட பேச்சை கேட்க மாட்டார்
நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக உள்ள நிலையில், அவர் தன்னுடைய பேச்சை கேட்க மாட்டார் என்றும் அவர் ஒரு உணவைக்கூட தான் சொன்னால் சாப்பிட மாட்டார் என்றும் அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதை எடுத்துக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கதை பிடித்ததால் நடித்தார்
இந்தக் கதை அவருக்கு பிடித்ததால் மட்டுமே நடிக்க சம்மதித்தார் என்றும் கண்மணி என்ற கேரக்டர் அவரை இம்ப்ரஸ் செய்தததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அவர் தனக்காக இந்தக் கதையில் நடிக்கவில்லை என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோலதான் சமந்தாவிற்கும் இந்தக் கதை பிடித்ததால்தான் ஓகே சொன்னார் என்றும் அவர் கூறியுள்ளார்.

டைட்டானிக் போல காதல் கதை
இந்தப் படம் அலைபாயுதே, டைட்டானிக் போல காதல் கதையாக ரொமாண்டிக் காமெடியாக எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை அந்த வகையில் பார்த்தால் மட்டுமே சிறப்பான அனுபவத்தை தரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











