Nayanthara: இதனாலத்தான் ப்ரமோஷன்ல நயன்தாரா கலந்துக்கறதில்லை.. சீக்ரட் சொன்ன விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக தொடர்ந்து இருந்து வருகிறார்.
கடந்த மாதத்தில் ரிலீசான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படமே 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

அடுத்தடுத்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அவர் சிறப்பாக அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
சினிமா பிரமோஷன்களில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பாலிவுட்டிலும் ஜவான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார். அட்லீ இயக்கத்தில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
இதன்மூலம் பாலிவுட்டிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் கணிசமான படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இவற்றில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் அடங்கும். கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தபின்பும் தன்னுடைய கேரியரில பிசியாக நடித்து வருகிறார்.

இவரது கணவர் விக்னேஷ் சிவனும் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து படமியக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய ப்யூட்டி ப்ரொடக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார் நயன்தாரா. இதற்கான பிரமோஷன்களில் இவர் பங்கேற்றுள்ள நிலையில், தன்னுடைய படங்களின் பிரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலங்களாக உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், தன்னுடைய படங்கள் குறித்து தான் பேசுவதை நயன்தாரா விரும்பமாட்டார் என்றும் தன்னுடைய படங்கள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அதற்கான பிரமோஷன்களை தானே செய்துக் கொள்ளும் என்ற கொள்கை உடையவர் அவர் என்றும் கூறியுள்ளார். அதனால் படங்களின் பிரமோஷன்களில் அவர் பங்கேற்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் பிரமோஷன்களிலும் நயன்தாரா பங்கேற்கவில்லை.
இந்தியா முழுவதும் ஜவான் படத்தின் பிரமோஷன்களுக்காக பறந்து பறந்து செயல்பட்டார் ஷாருக்கான். அந்த நேரத்தில் பிரமோஷன்களில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. அவற்றிற்கெல்லாம் மழுப்பி ஒருவாறாக சமாளித்தார் ஷாருக்கான். சென்னையிலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிலும் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் இன்ஸ்டாகிராமில் இணைந்து, தன்னுடைய மகன்களுடன் தான் இருக்கும்படியான வீடியோவை வெளியிட்டு படத்திற்கு மறைமுகமாக விளம்பரம் தேடிக் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











