அவமானம் மற்றும் தோல்வி கற்றுக் கொடுக்கும் அனுபவம்.. வாழ்க்கையின் வலி குறித்து விக்னேஷ் சிவன் பகிர்வு

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

தொடாந்து வாடகைத்தாய் விவகாரம், முன்னதாகவே ரிஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் இந்த ஜோடி சிக்கியது.

அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவிப் போனது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு இருவரும் ஆளானதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் திரையுலகப் பயணம் போடா போடியில் துவங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. முன்னதாக நானும் ரவுடிதான் படத்தின்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் தீ பற்றிக் கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளாகவே காதல் ஜோடிகளாக வலம்வந்த இவர்கள் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

விமரிசையாக நடைபெற்ற திருமணம்

விமரிசையாக நடைபெற்ற திருமணம்

ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய அளவில் முன்னணி நடிகர்கள் புடைசூழ இவர்களது திருமணம் மகாபலிபுரத்தையடுத்த ஒரு ரெசார்ட்டில் மிக விமரிசையாக நடைபெற்றது. சில மாதங்களிலேயே வாடகைத்தாய் முறையில் இந்த ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினர். இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு, தாங்கள் முன்னதாகவே திட்டமிடலுடன் ரிஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த இத்தகைய சர்ச்சைகளில் இந்த ஜோடி சிக்கியது.

கைநழுவிய ஏகே 62 பட வாய்ப்பு

கைநழுவிய ஏகே 62 பட வாய்ப்பு

இதனிடையே, நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனிடம் சென்றது. இதில் நயன்தாராவே நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி தற்போது மகிழ்திருமேனி ஏகே62 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இந்த விவகாரம் குறித்து அஜித் மற்றும் லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால், நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏகே63 பட வாய்ப்பு?

ஏகே63 பட வாய்ப்பு?

எப்போதும் லைட்டான கதைக்களத்துடன் படங்களை அணுகும் விக்னேஷ் சிவன், அஜித்தின் படத்தை வலிமையுடன் எதிர்கொள்வது சாத்தியம் இல்லை என்றும் அதனால்தான் அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவியபோதும் தொடர்ந்து அஜித்தின் சில விஷயங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் விக்னேஷ் சிவன். இதனால் ஏகே63 படத்தை அவர் இயக்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அடுத்தப்பட வேலைகளில் பிசி

அடுத்தப்பட வேலைகளில் பிசி

இந்நிலையில் ஜவான் படத்தில் நடித்துவரும் நயன்தாரா மும்பையில் தங்கியுள்ளார். அவருடன் விக்னேஷ் சிவனும் குழந்தைகளும் உடன் தங்கியுள்ளனர். சமீபத்தில் இவர்கள் நால்வரையும் மும்பை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. அதேபோல பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை நயன்தாரா சந்தித்த சென்றபோது விக்னேஷ் சிவனும் உடனிருந்தார். இவ்வாறு நயன்தாராவின் செயல்பாடுகளுக்கு துணையாக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். தனது அடுத்தப்படத்தின் வேலைகளிலும் அவர் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் உருக்கமான பதிவு

விக்னேஷ் சிவனின் உருக்கமான பதிவு

இதனிடையே Son kissed என்ற கேப்ஷனில் தன்னுடைய குழந்தையுடன் தான் கொஞ்சும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். மேலும் தன் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் தனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

அவமானம் அதிகமாக கற்றுக்கொடுக்கும்

அவமானம் அதிகமாக கற்றுக்கொடுக்கும்

பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதைவிட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக் கொடுப்பதாகவும் விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடினமான நேரத்தில் தான் சந்திக்கும் நபர்களுக்காக கடவுளுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். கடவுளின் கருணையால்தான் தான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதனிடையே விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவிற்கு நடிகை சமந்தா, லவ் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X