இப்போ என்னோட மனைவி.. நயனுடன் காதல் குறித்து சொன்ன விக்னேஷ் சிவன்.. உருகியிருக்காரே!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது.
ரஜினி தாலி எடுத்துக் கொடுக்க பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நடிகை நயன்தாரா
நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துள்ள நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்களது காதல் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இவர்களது திருமணம் குறித்து அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

விக்னேஷ் -நயன் திருமணம்
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்றைய தினம் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, கார்த்தி, விஜய், சரண்யா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஆகம விதிப்படி இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
Recommended Video

தாலி எடுத்துக்கொடுத்த ரஜினி
20 புரோகிதர்கள் சூழ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் இனிதாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தையொட்டி அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடையில் நடைபெற்றன. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

காதலின் அடுத்த கட்டம்
இதனிடையே தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் பதிவில் நயன்தாராவுடனான தன்னுடைய காதலின் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார். நயன்தாராவிலிருந்து காதம்பரி, தங்கமே, என்னுடைய பேபி, என்னுடைய உயிர் என்னுடைய கண்மணி தற்போது என்னுடைய மனைவி என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படங்கள் பகிர்வு
தன்னுடைய திருமண புகைப்படங்களையும் அவர் இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். சிகப்பு நிற புடவையில் நயன்தாரா தேவதையாக ஜொலிக்கிறார். விக்னேஷ் சிவனும் பாரம்பரியமும் நவீனமும் கலந்த காஸ்ட்யூமில் சிறப்பாக காணப்படுகிறார். இவர்களது திருமணம் ரசிகர்களின் கனவாக இருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











