கதீஜா கேரக்டருக்கு முதல்ல இவங்களத்தான் பிக்ஸ் பண்ணியிருந்தாராமே... விக்னேஷ் சிவன் புது தகவல்!
சென்னை : தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தையொட்டி பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். படத்தை தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த படம்
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஆயினும் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். படத்தின் பிரமோஷன் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

2016ல் திட்டமிட்ட விக்னேஷ் சிவன்
படம் ரிலீசான நிலையிலும் படத்திற்காக பேட்டி உள்ளிட்டவற்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் கொடுத்து வருகிறார். இதில் படம், சொந்த வாழ்க்கை, நயன்தாரா உள்ளிட்டவை குறித்து அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் படத்தை 2016லேயே தான் திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கதீஜா கேரக்டருக்கு த்ரிஷா
இந்தப் படத்தை எடுக்க நடிகை நயன்தாரா தனக்கு ஊக்கம் கொடுத்ததாகவும் படத்தின் முதலிலிருந்து டப்பிங் நிறைவுற்றது வரையில் தன்னுடன் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதலில் இந்தப் படத்தில் த்ரிஷாவையே தான் யோசித்து வைத்ததாகவும் ஆனால் அவருடைய டேட்ஸ் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமந்தாவின் பேச்சுவார்த்தை
அப்போதுதான் சமந்தாவிடம் இதுகுறித்து பேசியதாகவும் ஆனால் அந்த சமயத்தில் அவர் தெலுங்கில் பிசியாக இருந்ததால், நயன்தாராதான் அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றதாகவும் விக்னேஷ் சிவன் மேலும் கூறினார். இந்த விஷயத்தில் மிகவும் ஒத்துழைப்பை தந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Recommended Video

ரசிகர்களை கவர்ந்த கதீஜா கேரக்டர்
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தின் கதீஜா கேரக்டரில் நடித்துள்ள சமந்தா அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த கேரக்டரில் த்ரிஷா கமிட் ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











