தியேட்டர் திறந்த உடனே... ராக்கி படம் குறித்த ரசிகர் கேள்வி... சூப்பர் பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்

சென்னை : இயக்குநர் அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ராக்கி.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கம்

அருண் மாதேஸ்வரன் இயக்கம்

கடந்த 2017ல் வெளியான தரமணி படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி மற்றும் ரோகிணி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் நண்பர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

அடுத்தடுத்த டீசர்கள் வெளியீடு

அடுத்தடுத்த டீசர்கள் வெளியீடு

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. நீண்ட நாட்களாக இந்த படம் ரிலீசுக்காக வெயிட்டிங். கடந்த ஆண்டில் வெளியான இந்த படத்தின் ட்ரெயிலர் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான இரண்டு டீசர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ரிலீஸ் குறித்து விக்னேஷ் சிவன்

ரிலீஸ் குறித்து விக்னேஷ் சிவன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவனிடம் மீம்ஸ் போன்று இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தியேட்டர்கள் ஓபன் ஆனவுடனே படம் ரிலீஸ் என்று அவர் பதிலளித்துள்ளார். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாபாத்திரம்

முக்கிய கதாபாத்திரம்


இந்த படத்தின் இயக்குநர் பாரதிராஜா இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2019ல் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X