Nayanthara: ஹேப்பி மதர்ஸ் டே தங்கமே.. நயனுக்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்கி. ஒரே ஹார்ட்டினா இருக்கே!

சென்னை: நடிகை நயன் மற்றும் இயக்குநர் விக்கி கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளார்கள். மிகவும் ஜாலியான குடும்பமாகவும், அட்டகாசமான ஜோடியாகவும் அவர்கள் உள்ளார்கள். அவர்களின் படங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உள்ளதோ, அதே அளவுக்கு அவர்களின் குடும்ப நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இன்று அதாவது மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் மார்ச் மாதமே கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மே மாதம் கொண்டாடப்படுவதால், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவியும் நடிகையுமான நயன்தாரா, தங்களின் குழந்தைகள் இருவரையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்களுடன் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Director Vignesh Shivan Romantically Says Mothers Day Wishes To Nayanthara

என் தங்கமே: தனது காதல் மனைவி நயன் மீது எப்போதும் அன்பை டன் கணக்கில் பொழியும் காதல் கணவர் விக்னேஷ் சிவன், அன்னையர் தினத்திற்கு மட்டும் விட்டு வைப்பாரா என்ன? இவரது இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை டேக் செய்து, அன்னையர் தின வாழ்த்து மழை பொழிந்துள்ளார். அவரது பதிவில், இனிய அன்னையர் தின வாழ்த்துகள் தங்கமே! உனது வாழ்க்கையின் மிக அழகான காலகட்டம் இது. நீ அம்மா ஆகிவிட்டாய் என்ற போதும், அம்மாவாக இருக்கும் போது உனக்கு வரும் மகிழ்ச்சியின் அளவுக்கு மற்ற விஷயங்களில் வெளிப்படுவதில்லை. சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி. அதை வேறு எதிலும் நான் கண்டதில்லை.

கொடுத்து வைத்தவர்கள்: உனது முகத்தில் இருக்கும் இந்த உண்மையான சந்தோஷம் உனது வாழ்க்கையில் எப்போதும் இருக்க கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். நீ ஒரு சிறந்த தாய். ஒரு அம்மாவாகவும் நடிகையாகவும் உனது குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையை நீ கையாள்வது எனக்கு நாள்தோறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. உயிர், உலக் மற்றும் நான் என நாங்கள் மூவரும் உன்னைப் போன்ற அம்மா கிடைத்ததற்கு மிகவும் கொடுத்து வைத்தவர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மில்லியன் கணக்கில் லைக்குகளையும் குவித்து வருகிறது. இந்த பதிவோடு விக்கி பகிர்ந்துள்ள புகைப்படங்களில் நயன் மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார். தனது குழந்தைகளுடன் இருக்கும் போது எந்த அம்மாவுக்குத்தான் சந்தோஷம் இருக்காது. நயனுக்கு பலரும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Director Vignesh Shivan Romantically Says Mothers Day Wishes To Nayanthara

நயன் & விக்கி: நயன் தற்போது இயக்குநர் சுந்தர் சி, இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இது இல்லாமல், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். மூக்குத்தி அம்மன் பாகம் 2 இந்த ஆண்டே ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், விக்கி தனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X