கடினமான சூழலை சமாளிக்க நாம எப்படி இருக்கணும்.. விக்னேஷ் சிவன் பதிவு!

சென்னை : எப்போதுமே பரபரப்பான ஜோடியாக ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக கவனம் ஈர்த்து வருகின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை இவர்கள் வரவேற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் விக்னேஷ் சிவன், தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் பரபரப்பான ஜோடியாக இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தாங்கள் இரட்டை குழந்தைகளை வரவேற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்

வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்

இவர்கள் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்ற நிலையில், சரியான நடைமுறைகளை இவர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் முறையாகவே தாங்கள் இந்தக் குழந்தைகளை வரவேற்றுள்ளதாக இவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

படங்களில் பிசியான ஜோடி

படங்களில் பிசியான ஜோடி

இதனிடையே, அடுத்தடுத்து இரண்டு ஹனிமூன்களை கொண்டாடிய நிலையில், தற்போது தங்களது வேலைகளில் மிகவும் பிசியாகவும் காணப்படுகின்றனர். நயன்தாரா ஜவான் படத்தின் சூட்டிங்கிலும், விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே62 படத்தின் முன்தயாரிப்பு பணிகளிலும் பிசியாக காணப்படுகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். ஆனால் தனக்கான எந்த அக்கவுண்டையும் உருவாக்காமல் உள்ளார் நயன்தாரா. இயல்பிலேயே மிகவும் குறைவாக பேசும் நயன்தாராவிற்கு இந்த அக்கவுண்டுகள் தேவைப்படாது என்று நினைத்தாரோ என்னவோ, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தாமல் உள்ளார்.

அதிகமான பாலோயர்கள்

அதிகமான பாலோயர்கள்

ஆனால் அவருக்கும் சேர்த்து வைத்து விக்னேஷ் சிவன், இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள் என அசத்தி வருகிறார். இதையடுத்து நயன்தாராவிற்கும் சேர்த்து இவரை அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே தற்போது வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை இவர் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் அடுத்தடுத்த பதிவுகள்

விக்னேஷ் சிவன் அடுத்தடுத்த பதிவுகள்

கடினமான நேரங்களை சமாளிக்க அதிக தைரியம் தேவைப்படுவதாகவும் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது என்றும் கூறியுள்ள விக்னேஷ் சிவன், விரைவில் நம்மை தேடி நல்ல விஷயங்கள் வரும் என்றும் கூறியுள்ளார். இதேபோல மற்றொரு பதிவில் உஙகளின் மனநலனிற்கும் உணர்வுகளுக்கும் சிறப்பாக பொருந்துபவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மனநெருக்கடியில் தம்பதி

மனநெருக்கடியில் தம்பதி


தற்போது வாடகைத்தாய் விவகாரத்தில் அதிகமான விமர்சனங்களை விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான மன நெருக்கடிகளையும் இவர்கள் எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த பதிவுகள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு தேவையான ஒன்றுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X