சுபமுகூர்த்த நேரத்தில் நயன்தாரா கழுத்தில் தாலி ஏறவில்லை.. பகீர் கிளப்பும் விக்னேஷ் சிவன் பெரியப்பா!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
மைலாப்பூர், திருவண்ணாமலை, காளிகாம்பாள், திருத்தணி உள்ளிட்ட கோயில்களை சேர்ந்த 20 புரோகிதர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு விக்னேஷ் சிவனின் பெரியப்பா மற்றும் பெரியம்மாவிற்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்பது நேற்றைய தினம் சர்ச்சையானது.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து நேற்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.

பிரபலங்கள் வாழ்த்து.
ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, சரத்குமார், சூர்யா, கார்த்தி, சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், அனிருத், டிடி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். ரஜினி தாலி எடுத்துக் கொடுக்க மிகவும் அழகான முறையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ரெசார்ட்டுக்கு மாறிய திருமணம்
முன்னதாக திருப்பதியில் திருமணத்தை நடத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திட்டமிட்டனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு திருமணம் நடத்தப்படவில்லை. இதனிடையே மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணத்தை மைலாப்பூர், திருத்தணி, காளிகாம்பாள், திருவண்ணாமலை போன்ற கோயில்களை சேர்ந்த 20 புரோகிதர்கள் நடத்தி முடித்துள்ளனர்.

குளிகை நேரத்தில் திருமணம்
வெளியில் வந்து மீடியாவிடம் பேட்டியளித்த புரோகிதர் ஒருவர், ஆகம விதிப்படி, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் சிறப்பாக நடந்ததாகவும், அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திருமணம் குளிகை நேரத்தில் நடைபெற்றுள்ளதாக விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் தற்போது பகீர் கிளப்பியுள்ளார்.

பெரியப்பா கேள்வி
இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி சூட்டிங்கை போல இந்த திருமணமும் நடைபெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது கல்யாணமாக தெரியவில்லை. குளிகை நேரத்தில் திருமணம் நடந்துள்ளது. மணக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரும்ப திரும்ப நடக்கும்
குளிகை நேரத்தில் எந்த நிகழ்ச்சியை செய்தாலும் அது திரும்ப திரும்ப நடக்கும் என்பதே ஐதீகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குளிகை நேரத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலிக்கட்டியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பாவும் இந்த சந்தேகத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அழைக்கப்படாத பெரியப்பா குடும்பம்
திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், தன்னுடைய சொந்த பெரியம்மா மற்றும் பெரியப்பாவுக்கே விக்னேஷ் சிவன் அழைப்பு கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் தற்போது அனைவரும் யோசித்து வருகின்றனர்.
Recommended Video

11 மணிக்கு தான் சுபமுகூர்த்தம்
ஆனால் விக்னேஷின் தந்தை இறப்பிற்கு பிறகு இரு குடும்பத்தினரிடையே சில மனக்கசப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. காலை 8.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் துவங்கிய நிலையில், 10.30 மணிக்குள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நேற்றைய தினம் காலை 11 மணிக்கு மேல்தான் சுபமுகூர்த்த நேரம் துவங்கியது.

புரோகிதர்கள் கவனிக்க தவறினார்களா?
ஆனால் திருமணம் 10.30 மணிக்கே நடந்து முடிந்துவிட்டது. 20 புரோகிதர்கள் சூழ நடந்த இந்தத் திருமணத்தில் அவர்கள் கவனத்திற்கு இந்த விஷயம் எப்படி போகாமல் இருந்திருக்கும் என்றும் யோசிக்க வைத்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மணமக்கள் நீண்ட காலம் நீடூழி வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











