இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்

சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் மிஸ்ஸிங் ஷூட்ஸ் என்று போட்ட பதிவைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல் படுத்த பட்டிருந்த நிலையில் ஷூட்டிங்ஸ் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சின்னத்திரைக்கு மட்டுமே தற்போது சில விதி முறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன் ஒரு படப்பிடிப்பில் எடுத்த ஷூட்டிங் வீடியோவை பதிவிட்டு மிஸ்ஸிங் ஷூட் என்ற போஸ்டை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்ஸ் செம்மையாக அவரை கிண்டல் செய்து ரிப்ளை செய்து வருகின்றனர். இதனை பார்த்த விக்னேஷ் சிவனும் அமைதியாகவே இருக்கிறார்.

அறிமுகம்

அறிமுகம்

சிம்பு , வரலக்ஷ்மி சேர்ந்து நடித்து வெளிவந்த படம் தான் போடா போடி , இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் விக்னேஷ் சிவன். அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி , நயன்தாரா வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரும் அளவில் பேசப்பட்டிருந்த நிலையில் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தையும் இயக்கினார் .

காதல் விவகாரம்

காதல் விவகாரம்

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் நயனிடன் காதல் வயப்பட்டார் நமது விக்னேஷ் சிவன். அதன் பிறகு அவர்களது காதல் விவகாரம் ஊருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ஜோடியாக கோவில்கள், விருந்து நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்களுக்கு ஜோடியாகவே வலம் வந்தனர். இவர்கள் இருவரும் புகைப்படமும் இணையத்தில் செம டிரெண்டானது. மேலும் சினிமா வட்டாரத்தில் இவர்களது காதல் கதை தான் பரபரப்பாக பேசப்பட்டது.

8 ஆண்டுகளில் 3படம் தான்

8 ஆண்டுகளில் 3படம் தான்

சினிமா துறைக்கு இவர் இயக்குனராக அடியெடுத்து வைத்து 8 ஆண்டுகள் ஆகிறது , ஆனால் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அதிலும் இரண்டு படங்கள் சுமாராகத்தான் வரவேற்பு பெற்றன .நானும் ரவுடி தான் படம் மட்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும், அவர் எடுத்து படங்கள் அனைத்தும் சாதாரண பட்ஜெட் படங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் போஸ்ட்

சிங்கிள் போஸ்ட்

கொரோனாவால் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர், மிஸ்ஸிங் ஷூட் என்ற கேப்ஷன்னுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த சிங்கிள் போஸ்ட் தான் இப்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.

நக்கல் அடித்த நெட்டிசன்ஸ்

நக்கல் அடித்த நெட்டிசன்ஸ்

இவர் மிஸ்ஸிங் ஷூட்ஸ் என்று பதிவிட்டதை பார்த்த நெட்டிசன்ஸ் பல பல நக்கலாக ரிப்ளைகளை பதிவிட்டு வருகின்றனர். எடுத்தது 3 படம் எதுல மிஸ்ஸிங் ஷூட் னு கேப்ஷன் வேற கொஞ்சம் நியாயமா கேப்ஷன் போடுங்க தல என்றும், இல்லாட்டி இவர் அப்டியே ஷூட்டிங் போய்டுவாரு , நீ நயன் கூட தானா சுத்திட்டு இருந்த , இல்லனா மட்டும் இவர் ஷூட்டிங் எடுத்து ஆஸ்கார் வாங்கிடுவாரு, மிஸ்ஸிங் நயன்னு போடுங்க தல கரெக்டா இருக்கும் போன்ற பல நக்கலாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் இணையத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர் . பிரபலங்கள் வெளியிடும் தகவலுக்கு பதில் கொடுத்து கொண்டும், நக்கல் அடித்து கொண்டு பதிவிடுவதை பலர் தனது பொழுது போக்காகவே செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்பொது சிக்கியவர் விக்னேஷ் சிவன் . இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்ஸ் வைரலாக பரப்பிக்கொண்டு வருகின்றனர் .அடுத்து யார் சிக்குவார் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X