ஹேக் செய்யப்பட்ட விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு.. கோபத்தில் இயக்குநர்!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டு, வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர்.
ஏகே62 படத்தை விக்னேஷ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு அவருக்கு கைநழுவி போயுள்ளது.
இதுகுறித்து நேற்றைய தினம் மௌனம் கலைத்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்தை மறைமுகமாக தாக்கி நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன், சிம்பு -வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தவர். தொடர்ந்து சில படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

கைநழுவிய ஏகே62 பட வாய்ப்பு
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு
மும்பையில் ஜவான் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ள நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் தன்னுடைய குழந்தைகளுடன் காணப்பட்டார். சூட்டிங்கின் இடையில் கிடைத்த பிரேக்கில் இவர்கள் நால்வரும் சென்னை திரும்பியுள்ளனர். இதனிடையே, Son Kissing என்று நேற்றைய தினம் விக்னேஷ் சிவன் ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில் அவமானம் மற்றும் தோல்வியே அதிகமான அனுபவத்தை கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் கணக்கு ஹேக்
இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான கோபமடைந்துள்ள விக்னேஷ் சிவன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் அச்சத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் ட்விட்டர் அக்கவுண்டும் இரு தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் ட்விட்டர் அக்கவுண்ட்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மறைமுக தாக்குதல்
நேற்றைய தினம் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை மறைந்திருப்பதாகவும், இந்த நேரத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்தும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் மறைமுகமாக அஜித்தை தாக்கி பேசியுள்ளதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தப்பட அறிவிப்பு
ஏகே 62 படத்தின் வாய்ப்பு கைநழுவிய நிலையில், அடுத்ததாக யாரை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. தனது பேவரிட் ஹீரோ விஜய் சேதுபதியை வைத்து அவர் படமியக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லவ் டுடே பட ஹீரோ பிரதீப்பை வைத்து படமியக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அடுத்தப்படம் குறித்த எந்த அறிவிப்பையும் விக்னேஷ் சிவன் இதுவரை மேற்கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











