Don't Miss!
- News
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித்தோட வெற்றி மந்திரம்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த சுவாரஸ்யம்.. இதுதான் சீக்ரெட்டா!
சென்னை : நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணி அமைத்துள்ள படம் ஏகே61.
இந்தப் படத்தை தொடர்ந்து தனது ஏகே62 படத்திற்காக பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார் அஜித்.
இந்நிலையில் அஜித் குறித்த சுவாரஸ்யங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
கொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்!

அஜித்தின் ஏகே61 படம்
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் இணைந்து நடித்துவரும் படம் ஏகே61. இந்தப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பூனாவில் நடைபெறவுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக் கொள்கின்றனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது டிசம்பருக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் -விக்னேஷ் சிவன் கூட்டணி
இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் இணையவுள்ளார் அஜித். இந்தப் படம் குறித்து இரு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் தற்போது விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளார்.

அஜித் குறித்த சுவாரஸ்யம்
தற்போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்திவந்த விக்னேஷ் சிவன், தொடர்ந்து இந்த வேலைகளை துரிதப்படுத்தவுள்ளார். இதனிடையே, தனது பேட்டியொன்றில் அவர் அஜித்குமார் குறித்த சுவாரஸ்ய பதிவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அஜித்தின் வெற்றி மந்திரம்
ஒரு படத்திற்காக வேலை செய்யும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அந்த வேலையை செய்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அதுபோன்று அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் எப்போதும் கூறுவார் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
அந்தப் படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதற்கொண்டு அந்தப் படத்தை தன்னுடைய படமாக நினைக்க வேண்டும் என்பது அஜித்தின் வெற்றி ரகசியம் என்றும் அதை தன்னுடைய படங்களில் இருக்குமாறு அஜித் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அஜித் படங்களில் வேலை செய்ய அனைவரும் விரும்புவதற்கு இதுதான் காரணம் என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.