விருப்பத்திற்குரியவர்களிடம் நிறைந்திருக்கும் சந்தோஷம்.. குடும்ப புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி 7 ஆண்டுகள் காதலித்துவந்த நிலையில் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறியுள்ளார். தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்
அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவிப்போன நிலையில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் விக்னேஷ் சிவன். அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். மகாபலிபுரத்தை அடுத்த ரெசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் பிரபலங்கள் பலர் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

வாடகைத்தாய் முறையில் குழந்தைகள்
தொடர்ந்து சில மாதங்களிலேயே வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக இந்த தம்பதி மாறினர். இந்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாக விளக்கம் அளித்தனர். இதுவும் சர்ச்சைகளை கொடுத்தது. தற்போது ஜவான் மற்றும் இறைவன் என இரு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதனிடையே, அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கைநழுவிப் போயுள்ளது.

விரைவில் அடுத்தப்பட அறிவிப்பு?
இதையடுத்து தன்னுடைய அடுத்தப்படத்தை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாலிவுட்டின் இளம் ஹீரோ ஒருவரிடம் விக்னேஷ் சிவன் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தியில் படத்தயாரிப்பு
ஒருபக்கம் படத் தயாரிப்பு பணிகளிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குஜராத்தியில் சுப் யாத்ரா என்ற படத்தை இவர்கள் தயாரித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக ரவுடி பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த படங்களில் ரவுடி பிக்சர்ஸ் தன்னுடைய தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடும்பப் புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்
இதனிடையே சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவுடன் காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் நயன்தாராவுடன் கைகள் பிணைத்தபடியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நம்முடைய விருப்பமானவர்களிடம்தான் நம்முடைய சந்தோஷம் அடங்கியுள்ளதாகவும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











