அடடடடா.. அப்பப்ப்பபா.. நானும் ரவுடிதான் பாட்டுக்கு உயிர் -உலக் கொடுத்த க்யூட் ரியாக்ஷன்!
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். 20 ஆண்டுகளை தொடர்ந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நயன்தாரா அவர்கள் இருவரையும் மிகவும் சிறப்பாக வளர்த்து வருகிறார். எங்கு சென்றாலும் தன்னுடைய குழந்தைகளை உடன் அழைத்து செல்வதை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழக்கமாக வைத்துள்ளனர். இடுப்பில் அவர்களை சுமந்தபடி இவர்கள் செல்வது ரசிகர்களை மிகவும் சிறப்பாக கவர்ந்து வருகிறது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் இவர் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை தொடர்ந்து 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தையடுத்த ஒரு ரெசார்ட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
நயன்தாரா & விக்னேஷ் சிவன்: இதையடுத்து நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். உயிர் மற்றும் உலக் என இவர்களுக்கு பெயரிட்டு மிகச்சிறப்பான வகையில் வளர்த்து வருகின்றனர். இவர்களின் வளர்ப்பிற்காக புதிய படங்களை கமிட் செய்வதிலும் கட்டுப்பாடுகளை நயன்தாரா விதித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எங்கு சென்றாலும் தங்களின் குழந்தைகள் இல்லாமல் இவர்கள் செல்வதே இல்லை. இடுப்பில் சுமந்தபடி அவர்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தூக்கி செல்வதை பார்க்க ரசிகர்களை உற்சாகம் காட்டுகின்றனர்.
உயிர் & உலக் க்யூட் வீடியோ: நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் என்று ஒருபுறம் மிகவும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் மிகவும் சிறப்பாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவர்கள் இருவரும் ஆக்டிவாக உள்ள நிலையில், அடுத்தடுத்து தங்களின் வெளிநாட்டு பயணங்கள், குழந்தைகளுடனான அவுட்டிங், பண்டிகை கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தைகளின் க்யூட் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். டிவியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த நானும் ரவுடிதான் படத்தின் தங்கமே பாடல் ஒடிக் கொண்டிருப்பதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது.
அப்பப்பப்பா.. அய்யய்யய்யோ: இந்தப் பாடலை பார்க்கும் உயிர் மற்றும் உலக் இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் அதில் நயன்தாராவை பார்த்து விஜய் சேதுபதி அடடடடா என கூறுவது போல அவர்களும் கூறுகின்றனர். அதேபோல அப்பப்பப்பா, அய்யய்யய்யோ என்ற வார்த்தைகளையும் பாடலுடன் இணைந்து அவர்களும் தங்களது மழலைமொழியில் பேசுகின்றனர். உன்னத்தான் என்று அவர்களின் அடுத்தடுத்த வார்த்தைகள் தொடர்கின்றன. இதை பார்க்கும்போது அழகு அள்ளுகிறது.


Click it and Unblock the Notifications











