இதயம் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால்... விக்னேஷ் சிவன் சொன்ன பாயிண்ட் நல்லாத்தான் இருக்கு!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் பாராட்டப்படுபவர். தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் படங்களிலும் இவரை பார்க்க முடிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

7 ஆண்டு காதல்

7 ஆண்டு காதல்

இவரும் இயக்குர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோதே இவர்களுக்குள் பற்றிய காதல் தீ தற்போது வரை எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை மேலும் வளர்க்க தற்போது இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் திருமணம்

அடுத்த மாதம் திருமணம்

வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை இருவருமே மறுக்கவில்லை. அதனால் இது தற்போது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இந்த தகவல் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருப்பதியில் திருமணம்

திருப்பதியில் திருமணம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த இருவரும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டதாக கூறப்பட்டது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசின்போதும் இவர்கள் திருப்பதிக்கு சென்றிருந்தனர். இந்தப் படத்தின் ரிலீசுக்கு பின்பு திருமணம் செய்ய திட்டமிட்டதாக முன்னதாக விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் சில படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகின்றனர். சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் தயாரித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

அன்னையர் தின புகைப்படங்கள்

அன்னையர் தின புகைப்படங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தில் தன்னுடைய அன்னையுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தற்போது நயன்தாராவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதயம் பெரிதாக இருந்தால்

இதயம் பெரிதாக இருந்தால்

சிறப்பான பின்புலத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மாடர்ன் உடையில் இருவரும் அட்டகாசமாக காணப்படுகின்றனர். நயன்தாராவை இறுக்கி அணைத்தபடி அவரை பார்த்தபடி இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். மேலும் இதயம் பெரிதாக இருந்தால் நம்முடைய செயல்பாடு அனைத்தும் புன்னகையில் நிறைவுறும் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

அஜித் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

தொடர்ந்து தங்களுடைய கேரியரில் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை அவரது ஏகே62 படத்திற்காக இயக்கவுள்ளார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்து விக்னேஷ் சிவன் அவ்வப்போது பேசி வருவரும் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X