Vignesh Shivan: அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு.. நயன் குறித்து விக்னேஷ் சிவன் பரவசம்!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து பல ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
வாடகைத்தான் முறை மூலம் இவர்கள் இருவரும், இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அவர்களது பெயர்களையும் சமீபத்தில் அறிவித்தனர்.
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழ், இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. தற்போது ஜவான் படம்மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுடன் புதிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்: நடிகை நயன்தாரா தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா, தமிழிலும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி, அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் ரிலீசாகவுள்ளது.
இதனிடையே, பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. பாலிவுட்டில் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாருக்குடன் இணைந்து நடித்துள்ளது நயன்தாராவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இவரை அடுத்தடுத்த படங்களில் புக் செய்ய இந்தி திரையுலகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில்தான் இவர்களுக்குள் அறிமுகமும் காதலும் நிகழ்ந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 ஆண்டுகள் காதலித்து, கடந்த ஆண்டில் திருமணமும் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணத்தில் இந்திய அளவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்றது இத்ந திருமணம்.
தொடர்ந்து வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராகியுள்ளது இந்த ஜோடி. இந்த குழந்தைகள் விவகாரத்தில் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், அதை சிறப்பாக கையாண்டனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்து, அவர்களின் பெயர்களையும் வெளிப்படுத்தினர். எங்கே சென்றாலும் இருவரும் தங்களது குழந்தைகளை கைகளில் அணைத்தபடி செல்வது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன், தற்போது நயன்தாராவுடன் தான் இருக்கும் புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பெரிய ஸ்கிரீன் முன்பு இருவரும் காதலுடன் அமர்ந்திருப்பதாக இந்தப் புகைப்படம் காணப்படுகிறது. இந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு அமைவது அழகு என்றும் அதிசயம், அற்புதம் அதுவே என்றும் காதல், மகிழ்ச்சி எமோஜிக்களுடன் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் தன்னுடைய இயக்கத்திற்கான வேலைகளை செய்துவந்தாலும், ஜெயிலர் படத்திலும் ஒரு பாடலை எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.


Click it and Unblock the Notifications











