Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னவாகும்... இப்படித்தான் ஆகும்!
சென்னை : நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
தொடர்ந்து திருப்பதி விசிட், தாய்லாந்து ஹனிமூன் ட்ரிப் என பிசியாக இருந்த இந்த ஜோடி தற்போது தங்களது வேலைகளில் பிசியாகியுள்ளனர்.
விக்னேஷ் சிவனும் ஏகே62 படத்திற்கான வேலைகளில் பிசியாகியுள்ளார். முன்னதாக அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வருகிறான்
சோழன்...இந்த
வாரம்
பொன்னியின்
செல்வன்
டீசர்
வருதா...
வெளியானது
க்ளிம்ப்ஸ்

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். கடந்த மாதம் 9ம் தேதி இவர்களது திருமணம் மகாபலிபுரம் ரெசார்ட்டில் திரையுலகினர் புடைசூழ சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து திருப்பதி விசிட், செய்தியாளர்கள் சந்திப்பு, கொச்சியில் நயன்தாரா அம்மா வீட்டு பயணம் என இந்த ஜோடி பிசியாக காணப்பட்டது.

தாய்லாந்து ஹனிமூன்
தொடர்ந்து தாய்லாந்தில் ஹனிமூன் ட்ரிப்பையும் முடித்துக் கொண்டு இருவரும் நாடு திரும்பினர். ஹனிமூன் ட்ரிப்பின்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அந்தப் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது.

சூட்டிங்கில் பிசி
தற்போது நாடு திரும்பியுள்ள இந்த ஜோடி அவரவர் வேலைகளில் பிசியாகியுள்ளனர். நயன்தாரா ஷாருக்குடனான ஜவான் படத்தில் தற்போது இணைந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. ஷாருக்குடனான காம்பினேஷன் காட்சிகளை அட்லி எடுத்து வருகிறார்.

புதிய படத்தில் விக்னேஷ் சிவன்?
இதனிடையே விக்னேஷ் சிவனும் ஏகே 62 படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய புகைப்படங்கள் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் மிகவும் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்துள்ளனர். இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரேஞ்சுக்கு இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். இதனிடையே, ஜவான் படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்திலும் நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது படங்கள் குறித்த அப்டேட்கள், நயன்தாராவுடன் புகைப்படம் வீடியோ வெளியீடு என தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார். குறிப்பாக நயன்தாராவுடனான இவரது பகிர்வுகள் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக காணப்படுகின்றன.