நயன்தாராவுடன் காத்துவாக்குல காதல் செய்யும் வீடியோவை பதிவிட்டு... தங்கமே என உருகிய விக்னேஷ் சிவன்

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்து, அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

 காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் முக்கோண காதல் கதை மையமாக கொள்ளப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாராவை விட சமந்தா நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திருப்பதியில் தரிசனம்

திருப்பதியில் தரிசனம்

விஜய் சேதுதி மற்றும் நயன்தாரா வழக்கம்போல சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். இருவர்மீதும் ஏற்படும் காதலை விட முடியாமல் தவிக்கும் கேரக்டரில் விஜய் சேதுபதி சிறப்பான நடித்திருந்தார். இந்நிலையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் நேற்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

காத்து வாக்குல காதல்

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் காத்து வாக்குல காதல் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மலை மற்றும் அருவி காணப்படும் இடத்தில் இருவரும் நடந்து செல்லும்படியாக அந்த வீடியோ காணப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக நயன்தாரா பின்புறத்தில் தட்டிக் கொடுக்கிறார்.

தங்கமே என உருக்கம்

தங்கமே என உருக்கம்

மேலும் தங்கமே என்று நயன்தாராவை அன்புடன் கேப்ஷனில் அழைக்கிறார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் தூண் போல தனக்கு வலிமையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய துணையாக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கண்மணி என அழைப்பு

கண்மணி என அழைப்பு

இத்தகைய ஆதரவால் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இந்தப் படம் வெளியாக காரணமாக இருந்த நயன்தாராவை கண்மணி என்று அழைத்து அவர் உருக்கம் தெரிவித்துள்ளார். மீண்டும் நயன்தாராவை இயக்கி அவரது பெஸ்ட்டை கொடுக்க வைத்ததற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

இனிமையான அனுபவம்

இனிமையான அனுபவம்

நயன்தாராவுடன் பணிபுரிவது எப்போதுமே மனதிற்கு இனிமையான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருவரும் திட்டமிட்டபடி காதம்பரி கேரக்டரை போலவே கண்மணியும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிபிபட்டுள்ளார். மேலும் லவ் மற்றும் தேங்க்யூ என்றும் அந்தப் பதிவில் நயன்தாராவிடம் கூறியுள்ளார்.

சமந்தாவிற்கு பிறந்தநாள் பரிசு

சமந்தாவிற்கு பிறந்தநாள் பரிசு

இந்த வீடியோவுடன் படத்தில் நயன்தாராவின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். இதேபோல சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவரது புகைப்படங்களை இணைத்துள்ள விக்னேஷ் சிவன், அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் பரிசு (படத்தின் ரிலீஸ்) பிடித்திருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X