கண் கலங்காதேனு பாட பாட அழுத நயன்! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விக்கி - செம ரொமான்ஸ் வீடியோ!

துபாய்: தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான ஜோடி என்றும் மிகவும் பொருத்தமான ஜோடி என்றும் சொல்லப்படும் தம்பதியர் என்றால் அது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரைச் சொல்லலாம். இவர்களின் காதல் கதை, திருமண கதை அதன் பின்னர் குழந்தைகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். இவர்கள் தங்களது சமூல வலைதளப் பக்கத்தில் தங்களது புகைப்படங்களை, தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்தால், உடனே லைக்குகளை தட்டி விடும் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் அவர்களை பின் தொடருகின்றனர். இந்நிலையில் அண்மையில் துபாயில் நடந்து முடிந்த சைமா விருதுகள் 2024இல் விக்னேஷ் சிவன் பாடல் பாட நயன்தாரா அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனப்படுபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளத்தினாலேயே இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தாலும் சரி, வுமன் செண்ட்ரிக் படங்களில் நடிதாலும் சரி, தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு, அதன் மூலம் கதாபாத்திரத்தின் தரத்தை இயக்குநர் மனதில் இருந்ததைவிட கூடுதல் உயரத்திற்கு கொண்டு செல்லும் தன்மை கொண்ட நடிகை.

nayanthara vignesh shivan siima 2024

நானும் ரவுடிதான் படத்தின் கதையைச் சொல்லச் சென்றபோது, நயன்தாராவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம், எப்படியும் நாம் சொல்லும் கதையை அவர் வேண்டாம் எனக் கூறிவிடுவார் என்ற எண்ணத்தில் சென்றவர்தான் விக்னேஷ் சிவன். ஆனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் படத்தில் பணிபுரியும்போதே, இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

nayanthara vignesh shivan siima 2024

விக்கி- நயன்: இந்நிலையில் இந்த கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற்ற சைமா விருதுகள் 2024இல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என இருவருக்கும் விருதுகள் கிடைத்தது. குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு நயன் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி படத்திற்காக நயனுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலை எழுதியதற்காக விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

nayanthara vignesh shivan siima 2024

பாட்டு - முத்தம்: இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்ட பின்னர் மேடைக்குச் சென்ற விக்னேஷ் சிவன், நயனுக்காக தனது படத்தில் இடம் பெற்றுள்ளா பாடலான, கண்ணான கண்ணே பாடலை பாடினார். அதில் கண்ணான கண்ணே நீ கலங்காதடி என்ற வரிகளை விக்னேஷ் சிவன் பாடப் பாட நயன்தாரா அழுதார். உடனே நயனைக் கட்டிப்பிடித்த விக்னேஷ் சிவன் அவரது நெற்றியில் முத்தம் வைத்தார். இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் ரொமாண்ட்டிக்காக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஃபோட்டோஸ்: விக்னேஷ் சிவனுக்கு அண்மையில் பிறந்த நாள் வந்தது. அன்றைய தினத்தில் கோவையைச் சேர்ந்த டிக்கெட் 9 என்ற நிறுவனத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் முதலீடு செய்தனர். அதேபோல் இருவரும் இன்னும் இந்தியா திரும்பாத நிலையில், வெளிநாட்டில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

nayanthara vignesh shivan siima 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X