இவ்ளோ பட்ஜெட்டா... ம்ஹூம் கட்டுப்படியாகாது... சிவகார்த்திகேயன் - நயன்தாரா காதலர் படம் டிராப்..?

By

சென்னை: பட்ஜெட் அதிகம் என்பதால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படம் டிராப் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி, விஜய் சேதுபதி- நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

நடிகை நயன்தாராவின் காதலரான இவர், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் என்ற படத்தைத் தயாரித்தும் வருகிறார்.

ரொமான்டிக் த்ரில்லர்

ரொமான்டிக் த்ரில்லர்

இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த ரொமான்டிக் த்ரில்லர் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

லைகா மறுப்பு

லைகா மறுப்பு

இந்ந்நிலையில் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் அந்த நிறுவனம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தயாரிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் வேறு சில நிறுவனங்களிடமும் பேசி வந்தார் விக்னேஷ் சிவன்.

பட்ஜெட் அதிகம்

பட்ஜெட் அதிகம்

அவர்களும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை காரணம் காட்டி, பின் வாங்கிவிட்டனர். அதனால் அந்த மெகா பட்ஜெட் படம் டிராப் ஆகிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வேறு கதை

வேறு கதை

இதையடுத்து சிறிய பட்ஜெட்டில் வேறு கதையை படமாக்க, விக்னேஷ் சிவன் முயற்சி செய்து வருகிறார் என்றும் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X