திருமணம் நல்லபடியா நடக்க காரணம் இவங்கதான்.. விக்னேஷ் சிவன் யாருக்கு நன்றி சொன்னாரு தெரியுமா ?

சென்னை : திருமணம் நல்லபடியாக நடக்க காரணமானவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்த திருமண நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி, விஜய், விஜய்சேதுபதி, கேஎஸ் ரவிக்குமார், அட்லி, அஜித்தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திரைப்பிரபலங்கள் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு மிகவும் கோலாகலமான நடைபெற்றது. திருமணத்திற்கு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியை தனியார் ஓடிடி தளம் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றிருந்தது. இதனால் திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு இருவரும் ஜோடியாக சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, சென்னை திரும்பி செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க நயன்தாரா விக்னேஷ் இருவரும் ஜோடியாக கேரளா சென்றனர். அங்கு சில நாட்கள் அவர்கள் தங்கியிருந்தார்.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

இதையடுத்து, தற்போது இருவரும் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் அடுத்த படம், நயன்தாராவுக்கு ஷாரூக்கான், சிரஞ்சீவி படங்களில் கமிட்டாகி இருப்பதால் ஹனிமூன் செல்லமாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் ஓட்டலில் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

நல்லபடியாக திருமணம் நடந்தது

நல்லபடியாக திருமணம் நடந்தது

அந்த வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டு இவர்களால் தான் தங்களது திருமண நல்லபடியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களது திருமண ஏற்பாட்டாளர்கள் தங்கள் திருமணத்தை ஆண்டாண்டுக்கும் நினைவு கூறத்தக்க ஒன்றாக மாற்றியதற்கு நன்றி என விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஜவான் படப்பிடிப்பில்

ஜவான் படப்பிடிப்பில்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா, தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விரைவில் சென்னை வர உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X