கல்யாணம் குறித்து கசிந்த தகவல்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விக்னேஷ் சிவன்!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இருவரும் தங்களது திருமண ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் முதன்முதலாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் நயன்தாரா இதயத்தில் ஹீரோவாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார் விக்னேஷ் சிவன். அவர்களுக்குள் அப்போது ஏற்பட்ட காதல் இதுவரை தொடர்ந்து வருகிறது.

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்

இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகின்றனர். தொடர்ந்து இவர்களது காதல் மிகவும் அழகாக தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை செல்லம், கண்மணி என விக்னேஷ் சிவன் கொஞ்சுவதை ரசிகர்கள் மிகவும் வரவேற்று கமெண்ட்டுகள் அளிப்பார்கள். தன்னுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு இரண்டு பெண்கள் காரணம் என்றும் ஒருவர் தன்னுடைய அம்மா என்றும் மற்றொருவர் நயன்தாரா என்றும் விக்னேஷ் சிவன் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

ஊக்கம் கொடுக்கும் நயன்தாரா

ஊக்கம் கொடுக்கும் நயன்தாரா

தன்னுடைய நெருக்கடி நேரங்களில் தன்னை தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுப்பவர் நயன்தாரா என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அவரது இயக்கத்தில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

முக்கோண காதலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தையும் அதன் திரைக்கதையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தங்களது திருமணம் குறித்து தாங்கள் திட்டமிட முன்னதாக முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 9ல் திருமணம்?

ஜூன் 9ல் திருமணம்?

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி விசிட்

திருப்பதி விசிட்

இதையொட்டி கடந்த ஒரே வாரத்தில் இருமுறை அவர்கள் திருப்பதிக்கு சென்றிருந்தனர். இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அவர்கள், தங்களது திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விக்னேஷ் சிவன்

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விக்னேஷ் சிவன்

ரசிகர்கள் எப்போதுமே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இவர்களின் திருமணம் குறித்த தகவல் அவர்களை மிகவும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது. இதையடுத்தே விக்னேஷ் சிவன் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X