அடுத்த மாசம் அடுத்த சிங்கிள்... காத்து வாக்குல ரெண்டு காதல் பத்தி விக்னேஷ் சிவன் அப்டேட்

சென்னை : நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்துள்ளனர்.

இதன் சிறப்பான இணைப்பாக சமந்தா இணைந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர்கள் மூவரின் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

வரவேற்பை பெற்ற ஜோடி

வரவேற்பை பெற்ற ஜோடி

கடந்த 2015ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்தது நானும் ரவுடிதான் படம். வசூல்மழையை பொழிந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. பாடல்களும் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

சூப்பர் இணைப்பாக சமந்தா

சூப்பர் இணைப்பாக சமந்தா

இந்நிலையில் இதே ஜோடி மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி பிறந்தநாளையொட்டி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியுடன் சூப்பர் இணைப்பாக சமந்தாவும் படத்தில் உள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி

இவர்கள் மூவரின் கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஆயினும் கொரோனா மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது. இதனிடையே படத்தின் அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Recommended Video

நான் ஏன் SHORTFILM DIRECTORS க்கு வாய்ப்பு தருவதில்லை |Producer Ravindar chat-p-02 |Filmibeat Tamil
விக்னேஷ் சிவன் பதில்

விக்னேஷ் சிவன் பதில்

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து பேசிய விக்னேஷ் சிவன், இந்த படத்தின் பாடல் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு வரும் ஜூலை மாதத்தில் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X