“என் அன்பை வார்த்தையால் விவரிக்க முடியாது“..அம்மாவின் அன்பில் நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்…
சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்த ஓர் அழகான புகைப்படத்தை பகிர்ந்து தனது தாயாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாட்சி குமார் முன்னாள் காவல்துறை அதிகாரியாவார்.
அவரின் பிறந்த நாள் அவரது குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். போடா போடி என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவருக்கு அடுத்தடுத்து படங்களும் வெற்றி அடைந்தன. இதையடுத்து, விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் போது தான் நயனும் விக்கியும் காதல் வயப்பட்டனர். இதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

கோலாகல திருமணம்
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த சினிமா பிரபலங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை பெற்றதால், பிரபலங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்தது.

நெகிழ்ச்சியான வாழ்த்து
இந்நிலையில், விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணத்தின் மீது தனது அம்மாவுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், அதில், என்னுடைய திரைப்படங்கள், வாழ்க்கை ,பாடல்கள் ஆகிய அனைத்திலும் நான் சொல்ல விரும்புவது எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய். என் வாழ்க்கையே உனக்காக நான் அர்ப்பணிக்கிறேன். என் அன்பை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.

எல்லாம் உங்களால்
உங்களுக்கு எல்லா பலத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் தர இறைவனிடம் வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் மாற்ற இந்த வாழ்நாள் முழுவதும் நீங்கள் செய்த அனைத்து ஆதரவு மற்றும் கடின உழைப்பையும் நினைத்து பெருமை அடைகிறேன். உங்களுக்கு சிறந்த தருணங்களை வழங்கவும், மகிழ்ச்சியான வயதைக் காணவும், வாழ்க்கையின் அனைத்து நல்வாழ்வை அனுபவிக்கவும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











