என் ஹீரோவை நான் வில்லனா பார்க்க மாட்டேன்.. விஜய்சேதுபதி குறித்து விக்னேஷ் சிவன் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்சேதுபதி குறித்து சூப்பரான தகவலை விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி ராம்போ கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விஜய்சேதுபதியை பார்க்கலாம்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

நயன்தாரா, சமந்தா இருவருக்குமே என்று மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்கள் தனித்தனியாக நடித்தாலே பார்ப்பதற்கு தனி கூட்டம் உள்ள நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் ஏகுறி உள்ளது.

பஞ்சமே இல்லாத காமெடி

பஞ்சமே இல்லாத காமெடி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் அளித்துள்ளது.

நெத்தியடி பதில்

நெத்தியடி பதில்

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் 62 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்ககான பணிகளை காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை வெளியான உடன்தொடங்க உள்ளார். இந்நிலையில்அஜித் 62 திரைப்படத்தில், அஜித்துக்கு வில்லனாக, விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்று விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். இந்த கேள்வியை விஜய் சேதுபதியும், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேட்டாராம். அதற்கு, 'என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன்' என்று விக்னேஷ் சிவன் சொல்லிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X