இயக்குநர் விஜய் - அமலா பால்.. திருமண ஏற்பாடுகள் ஜோர்... அழைப்பிதழ் வைக்க ஆரம்பித்தனர்!

By Shankar

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பாலின் திருமண ஏற்பாடுகள் ஜோராகத் தொடங்கிவிட்டன. திரையுலகினருக்கு அழைப்பிதழ்கள் தர ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த மாதம் (ஜுன்) 12-ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

நிச்சயதார்த்தம் சர்ச்சில்...

நிச்சயதார்த்தம் சர்ச்சில்...

விஜய் இந்து. அமலா பால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இதனால் திருமணத்தை இந்து முறைப்படியும், நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறைப்படியும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

அழைப்பிதழ்கள்

அழைப்பிதழ்கள்

திருமண அழைப்பிதழ்களெல்லாம் தயாராகி வந்துவிட்டன. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் நண்பர்களுக்கு இருவரும் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். தெய்வத் திருமகளில் நடித்த போதே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஜோடியாகத்தான் சென்றனர். பெரும்பாலும் விஜய் அலுவலகத்திலேயே இருப்பார் அமலா.

அறிவிப்பு

அறிவிப்பு

ஆனால் தங்கள் காதலை அவர்கள் பெரும்பாலும் மறைத்தே வந்தனர். சமீபத்தில்தான் காதலை பகிரங்கமாக அறிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து திருமணம் முடிவானது.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரா?

திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரா?

தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி, மலையாளத்தில் லைலா ஓ லைலா மற்றும் மிலி படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். திருமணத்துக்கு முன்பு இப்படங்களை முடித்து கொடுத்து விடத் திட்டமிட்டு உள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க அமலா பால் விரும்பினாலும், விஜய் வீட்டார் அதனை விரும்பவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X