சந்தானம், யோகிபாபு கலாய் காம்பினேஷனில் காமெடியில் கலக்கும் டகால்டியின் கிளைமாக்ஸ்

By

Recommended Video

Dagalty BlockBuster Hit 1st day Box Office | Santhanam | Rittika Sen | Vijay Anand

சென்னை: சந்தானம், யோகிபாபுவின் காம்பினேஷனில் டகால்டி படத்தின் கிளைமாஸ் காட்சி காமெடியில் கலக்குகிறது.

இயக்குனர் ஷங்கரிடம் சிவாஜி, எந்திரன் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் ஆனந்த். இவர் இயக்கியுள்ள படம், டகால்டி.

இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு, இந்தி நடிகர் தருண் அரோரா, பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹேண்ட்மேட் பிலிம்ஸ்

ஹேண்ட்மேட் பிலிம்ஸ்

இந்தப் படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் நரேன் இசையமைத்துள்ளார். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்செந்தூரில்

திருச்செந்தூரில்

படம் பற்றி இயக்குனர் விஜய் ஆனந்த் கூறும்போது, காமெடி படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. இப்போது இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்‌ஷன் காமெடி கதையான இதன் கதை, திருச்செந்தூரில் ஆரம்பித்து மும்பை வரை செல்கிறது.

யோகிபாபு

யோகிபாபு

ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்குச் சிரிப்பு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் பார்த்தாலே இது தெரிந்திருக்கும். சந்தானம் கலாய்தாலே சிரிப்பாக இருக்கும். அவருடன் யோகிபாபுவும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். படத்தின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தருண் அரோரா

தருண் அரோரா

தருண் மெயில் வில்லன். அவரது கேரக்டருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் ராதாரவி புது லுக்கில் வருகிறார். ஹீரோயின் ரித்திகா சென் பெங்காலைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசனத்தை சரியாக எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணி நடித்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X