அமலாபாலின் முன்னாள் கணவர் இயக்குநர் விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம்.. ஐஸ்வர்யாவை மணக்கிறார்!
Recommended Video
சென்னை: இயக்குநரும் அமலா பாலின் முன்னாள் கணவருமான விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் இயக்குநர் விஜய். தமிழில் நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகன், தலைவா, சைவம், தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய தெய்வ திருமகன், தலைவா ஆகிய படங்களில் நடிகை அமலாபால் நடித்தார்.

திருமணம்
அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதைதொடர்ந்து தங்களின் காதலை பெற்றோரிடம் கூற கடந்த 2014ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் இயக்குநர் விஜயும் - அமலா பாலும் திருமணம் செய்துகொண்டனர்.

விவாகரத்து செய்ய முடிவு
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர்.

2017ல் விவாகரத்து
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு அமலா பால் படத்தில் நடிப்பதிலும், விஜய் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சம்மதிக்காமல் இருந்த விஜய்
இதைத்தொடர்ந்து விஜயை இரண்டாவது திருமணம் செய்ய அவரது பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லாததால் சம்மதிக்காமல் இருந்து வந்தார் விஜய்.

சம்மதித்த விஜய்
இந்நிலையில் அவரது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இரண்டாவது திருமணத்திற்கு இயக்குநர் விஜய் சம்மதித்துள்ளார்.

பொதுநல மருத்துவர்
விஜய் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா ஆகும். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஆவார். தற்போது பொதுநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் ஐஸ்வர்யா.

சென்னையில் திருமணம்
டைரக்டர் விஜய், டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடைபெறுகிறது. இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











