H Vinoth: சதுரங்க வேட்டை படத்துல முதல்ல விஜய் ஆண்டனிதான் நடிக்கவிருந்தாரு.. பிரபல இயக்குநர் பகிர்வு!

சென்னை: நட்ராஜ் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற படம் சதுரங்க வேட்டை. பணத்தின் மீதான ஆசை எப்படி ஒருவரை ஏமாற்றுபவராகவும் மற்றவர்களிடம் ஏமாறுபவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சிறப்பான திரைக்கதையுடன் இந்தப் படத்தில் கொடுத்திருந்தார் ஹெச் வினோத்.

இந்தப் படம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஹெச் வினோத்திற்கு பெற்றுக் கொடுத்தது. அஜித்தின் துணிவு, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார் ஹெச் வினோத். தற்போது விஜய்யின் இறுதிப்படத்தையும் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததற்கு சதுரங்க வேட்டை படமே முதல் காரணமாக அமைந்தது.

h vinoth sathuranga vettai movie vijay milton


சதுரங்க வேட்டை படம்: ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது தளபதி 69 படமான ஜனநாயகன். விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ஸ்ருதிஹாசன், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்த படத்தின் 70% சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் குடியரசு தினத்தையொட்டி இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழுவினர் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். விஜய்யின் அரசியல் என்ட்ரியையொட்டி இந்த படத்தின் போஸ்டர்கள் காணப்பட்டன.

விஜய் -ஹெச் வினோத் காம்போ: ஜனநாயகன் படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. கேவிஎன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக விஜய் -அனிருத் காம்பினேஷனில் சிறப்பான படங்கள் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் இறுதி படமான ஜனநாயகன் படத்திற்கும் அனிருத் மாஸான இசையை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சதுரங்க வேட்டையில் நடிக்கவிருந்த விஜய் ஆண்டனி: இதனிடையே ஹெச் வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை குறித்து தற்போது இயக்குநர் விஜய் மில்டன் பேசியுள்ளார். அவரது பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ஹெச் வினோத் சதுரங்க வேட்டை படத்தை எடுக்க தயாரான நிலையில் இந்தப் படத்தில் முதலில் விஜய் ஆண்டனியை நடிக்க வைக்க அவர் விரும்பியதாகவும் ஆனால் ஹெச் வினோத்தின் இந்த விருப்பம் நிறைவேறவில்லை என்றும் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் நடராஜ் நடித்து மிகப்பெரிய அளவில் படம் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் தன்னுடைய படங்களுக்கான சரியான திட்டமிடுதலை ஹெச் வினோத் மேற்கொள்வார் என்றும் விஜய் மில்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹெச் வினோத் வெற்றி தற்காலிகமானதல்ல: ஹெச் வினோத்தின் வெற்றி தற்செயலாகவோ, மேஜிக்கலாகவோ நடந்தது இல்லை என்றும் தன்னுடைய பயணத்தை திட்டமிட்டே அவர் தொடர்ந்து வருவதாகவும் விஜய் மில்டன் மேலும் கூறியுள்ளார். தான் நினைத்த வெற்றியை சிறப்பாக பெற்றவர் ஹெச் வினோத் என்றும் தெரிவித்தள்ளார். சதுரங்க வேட்டை படம் மிகச்சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்தடுத்த அஜித் படங்களையும் தற்போது விஜய் படத்தையும் இயக்கி வருகிறார் ஹெச் வினோத். விஜய்யின் இறுதிப்படமான ஜன நாயகன் படம் விஜய்க்கு மட்டுமில்லாமல் ஹெச் வினோத்திற்கும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X