எனது படத்தில் விஜய்காந்த் நடிக்கிறார் என்பது உண்மைதான்... விஜய் மில்டன் சொல்லியிருக்காரு!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனியை மழை பிடிக்காத மனிதன் படத்திற்காக இயக்கி வருகிறார் விஜய் மில்டன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்தும், விஜய் ஆண்டனி, விஜய்காந்த், சரத்குமார் உள்ளிட்டவர்கள் குறித்து விஜய் மில்டன் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டி வருகின்றன. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மழை பிடிக்காத மனிதன் படம்

மழை பிடிக்காத மனிதன் படம்

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியுள்ளார் மேகா ஆகாஷ். இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்து வருகிறார்.

விஜய் மில்டன் இயக்கம்

விஜய் மில்டன் இயக்கம்

கழுகு படத்திற்கு பிறகு சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் பைராகி படத்தை எடுத்து முடித்துள்ளார் விஜய் மில்டன். இதையடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் படம் குறித்தும் அதன் நடிகர்கள் குறித்தும் விஜய் மில்டன் மனம் திறந்துள்ளார்.

படம் குறித்து விஜய் மில்டன்

படம் குறித்து விஜய் மில்டன்

தானும் விஜய் ஆண்டனியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருவதாகவும் தான் கதை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். மேலும் எதுவுமே இல்லாத மனிதனுக்கு கிடைக்கும் உறவுகள் இந்தப் படத்தின் கதைக்களமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடிப்பில் தேறிய விஜய் ஆண்டனி

நடிப்பில் தேறிய விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி ஆரம்ப காலத்தில் இருந்ததைவிட தற்போது நடிப்பில் மிகவும் தேறிவிட்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு மேலும் சிறந்த அடையாளத்தை தரும் என்றும் கூறியுள்ளார். சரத்குமார் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்காந்த் நடிப்பது உண்மைதான்

விஜய்காந்த் நடிப்பது உண்மைதான்

இதேபோல படத்தில் நடிகர் விஜய்காந்த் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைதான் என்றும் விஜய் மில்டன் கூறியுள்ளார். படத்தில் அவருக்கு பெரிய மனிதர் கேரக்டர் என்றும் அவரை திரையில் மீண்டும் பார்க்க தனக்கு மிகவும் ஆசை என்றும் தெரிவித்துள்ளார். அவரும் நடிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏராளமான நட்சத்திர பட்டாளம்

ஏராளமான நட்சத்திர பட்டாளம்

காலமும் அவரது உடல்நிலையும் ஒத்துழைத்தால் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அதிகமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாகவும் மனதை அசைத்துப் பார்க்கும் அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X