'தெய்வத் திருமகள்' நிலா பாப்பா நடிக்கும் சைவம்: டைரக்டஷன் விஜய்

சென்னை: தெய்வத்திருமகள் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் விஜய், பேபி சாராவை வைத்து 'சைவம்' என்ற பெயரில் அடுத்த படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.

'தலைவா' படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்தே அடுத்த படத்தை இயக்கப் போகிறார் விஜய் என பரவிக் கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டைரக்டர் விஜய். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாம்.

பெரிய, பிரபலமான நடிகர்களை வைத்து படம் பண்ணியவர்கள் மீண்டும் அது போன்ற படங்களைத் தயாரிக்கவே விரும்புவர். ஆனால், விஜய் இதிலிருந்து வேறு பட்டுள்ளார்.

அதிர்ச்சி வைத்தியம்...

அதிர்ச்சி வைத்தியம்...

அடுத்தடுத்து அஜித், ஆர்யா, விக்ரம், விஜய் என முன்னணி ஹீரோக்களை இயக்கி வரும் விஜய்யின் அடுத்த இலக்கு ரஜினி, கமல் போன்றவர்களாகத் தான் இருக்கும் என எதிர்பார்த்தால், அவர் சாராவை வைத்து குழந்தைகள் படம் இயக்கப்போகிறேன் என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.

நிலாப்பாப்பா...

நிலாப்பாப்பா...

தெய்வத் திருமகள் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்த நிலாப் பாப்பாவான சாரா தான் இதன் கதாநாயகி.

சேவலுக்கும், சாராக்கும் நட்பு...

சேவலுக்கும், சாராக்கும் நட்பு...

கோவிலுக்கு பலி கொடுக்கப்படுவதற்காக வளர்க்கப்படும் ஒரு சேவலிடம் சாரா கொண்டுள்ள நட்பே படத்தின் கதைக்கருவாம். படத்திற்கு சைவம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சைவச் சமையல்...

சைவச் சமையல்...

இப்படம் குறும்படம் என்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ திரைப்படம் என்கின்றனர். சைவச் சமையல் ரெடியானதும் தான் மீதி விவரம் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X