என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்.. 2வது திருமணம் குறித்து மனம் திறந்த விஜய்!!

சென்னை: இரண்டாவது திருமணத்தின் மூலம் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக இயக்கு விஜய் கூறியுள்ளார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஏஎல் விஜய். தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகனான விஜய் தமிழில் மதராசப்பட்டினம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தான் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்த அமலா பாலை கடந்த 2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

இயக்குநர் சம்மதம்

இயக்குநர் சம்மதம்

இதனைத்தொடர்ந்து இயக்குநர் விஜயின் பெற்றோர் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு விஜய் சம்மதித்துள்ளார்.

றெக்கைகட்டி பறந்த செய்தி

றெக்கைகட்டி பறந்த செய்தி

சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை விஜய் திருமணம் செய்யவுள்ளார். இதுதொடர்பான செய்திகள் கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் றெக்கை கட்டி பறந்த நிலையில் இயக்குநர் விஜய் அதனை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

மகிழ்ச்சி மற்றும் வலி

மகிழ்ச்சி மற்றும் வலி

'வாழ்க்கை பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானது மற்றும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையை போலவே என் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி மற்றும் வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளது.

அவசியத்தை உணர்கிறேன்

அவசியத்தை உணர்கிறேன்

ஆனால் இதுபோன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஆகும். தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தை பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்

புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்

என் குடும்பத்தினர் என் வாழ்க்கை துணைவியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குடும்ப விழாவாக இந்த திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்." இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X