ரஜினியின் ஆசையை நிறைவேற்றத் தயாரான பிரபல இயக்குநர்.. கதையும் ரெடி.. ஓகே சொல்வாரா தலைவர்?

ரஜினிக்காக திருநங்கை கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

சென்னை: ரஜினிக்காக திருநங்கை கதாபாத்திரத்தில் ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறாராம் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

நடிகர் கமலின் அண்ணனும், மூத்த நடிகருமான சாருஹாசனை நாயகனாக நடிக்க வைத்து தாதா 87 என்ற படத்தைத் தந்தவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருந்த விதம் அதிக பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

Director Vijay Sri has script ready for Rajinis transgender desire

இந்நிலையில் நடிகர் ரஜினிக்காக திருநங்கை கதைக்களம் கொண்ட கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம் அவர். ரஜினியின் காதுகளுக்கும் அந்த கதை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பையில் நடந்த தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ரஜினி. அப்போது, 'திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசைப் படுவதாக' அவர் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தான், ரஜினிக்கு விஜய் ஸ்ரீ கதை தயார் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 'ரஜினி திருநங்கை வேடத்தில் நடித்தால் திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வு அவர்களின் மீதான மதிப்பு சமூகத்தில் அதிகமாகும். நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்' என இது தொடர்பாக விஜய் ஸ்ரீ கூறியுள்ளார்.

தற்போது சிவா இயக்கத்தில் தலைவர் 168ல் நடித்து வருகிறார் ரஜினி. அப்படத்திற்குப் பிறகு தனது கனவு கதாபாத்திரமான திருநங்கை வேடத்தில் நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X