காதலை மறைக்கவில்லை.. விஜய் - திரிஷாவை பாராட்டுங்கள்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து ஒரு திருமணத்துக்கு வந்ததிலிருந்து அவர்கள் இரண்டு பேருக்குமிடையே என்ன இருக்கிறது என பலரும ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி பலரும் அவர்கள் இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் பற்றி பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் ஓபனாக சில விஷயங்களை பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்டிருக்கும் விவாகரத்தை விடவும்; விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து ஒரே நிற உடையை அணிந்து வந்திருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. மனுவில் சங்கீதா குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என அனைவரும் சந்தேகப்பட்ட சூழலில்; சந்தேகப்படாதீர்கள் அதுதான் உண்மை என்பதை அவர் தனது செயல்பாட்டின் மூலம் உறுதி செய்துவிட்டதாகவும்; இப்படி அவர் செய்திருக்கவே கூடாது என்றும் ஓபனாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Director Vikram Bhatt Reacts to Vijay Trisha Controversy His Comments Go Viral
Photo Credit:

இயக்குநர் விக்ரம் பட் ஓபன் டாக்: இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக விக்ரம் பட்; விஜய் - திரிஷா குறித்து ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், "விஜய்யையும், திரிஷாவையும் பாராட்டுவதற்கு எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. எங்களுக்குள் எதுவும் இல்லை என்று நடிக்காமல் இருப்பது ஒருவகையான கண்ணியம் ஆகும். காதலை பாவ செயல் போல் மறைக்காமல் இருப்பதும் கண்ணியம்தான். விஜய் - திரிஷவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகள் வதந்திகளா இல்லை உண்மையா இல்லை பொய்யா என எனக்கு தெரியாது.

சிறைவாசம் பற்றி: என்னுடைய அண்மை கால சிறைவாசம் சுதந்திரத்தின் மீதான மதிப்பை எனக்கு அதிகப்படுத்தியது. வராத தேநீருக்காக நீங்கள் காத்திருப்பதும், டூத் பேஸ்ட்டுடன் நீங்கள் போராடுவதும், மாலை ஏழு மணிக்கு வரும் முன் பிணை மனுவுக்காக காத்திருந்த தருணங்களும் அந்த மதிப்பை எனக்கு உணர்த்தியது. இது மனித ஆன்மாவின் சிறை வாசம். மகிழ்ச்சியின் சிறை வாசம். இரண்டு பேர் ஒரு உறவில் இருக்கும்போது அந்த உறவு தொடர வேண்டுமென சமூகம் வலியுறுத்துவதும்கூட ஒருவகையில் சிறை வாசம்தான்.

Also Read
திரிஷாவால் விஜய்க்கு பாதிப்பு.. குந்தவையை விடாத பார்த்திபன்.. புதிய வீடியோ வெளியிட்டு அதிரடி
திரிஷாவால் விஜய்க்கு பாதிப்பு.. குந்தவையை விடாத பார்த்திபன்.. புதிய வீடியோ வெளியிட்டு அதிரடி

இரண்டு பக்கங்களிலும்: நான் இந்த இரண்டு பக்கங்களிலும் இருந்திருக்கிறேன். நான் ஒருவரிடம் முட்டாளாகவும் இருந்திருக்கிறேன். முட்டாளும் ஆக்கப்பட்டிருக்கிறேன். மனித மனம் தவறு செய்யக்கூடிய ஒன்றுதான். அது மகிழ்ச்சியைத்தான் எப்போதும் தேடி செல்லும். தனிப்பட்ட முறையில் நாம் அனைவரும் இரக்க குணம் படைத்தவர்கள். மற்றவர்களின் பலவீனங்களை புரிந்துகொள்ளும் தன்மை உடையவர்கள். காதலின் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்ள கூடியவர்கள்தான்.

எல்லாம் மாறிவிடுகிறது: ஆனால் கூட்டமாக இருக்கும்போது அனைத்தும் மாறிவிடுகின்றன. சட்டென்று நாம் பாவமற்றவர்களாகி விடுகிறோம். உடனடியாக நாம் நீதிமான்களாகவும் மாறிவிடுகிறோம். நம் இரக்கம் காணாமல் போய்விடுகிறது. எப்போதும் நாம் மனித சுதந்திரத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு காதலித்து வாழ்வதற்கான அத்தனை உரிமையும் இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X