twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்படு தேறல் பாடலை இயக்கும் மதயானைக் கூட்டம் டைரக்டர்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியரான வைரமுத்து, 1980 களுக்கு முன் தொடங்கி இதுவரை ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதி உள்ளார். இதற்காக பலமுறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

    கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளில் உருவான கவிதைகள் பலவும் கவிதை தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவர் எழுதிய கருவாச்சி காவியம் போன்ற புத்தகங்களும் மிகவும் பிரபலம். சினிமாவில் பல புதுமைகளை படைத்த வைரமுத்து, தற்போது மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

    Director Vikram Sukumaran to direct Vairamuthus Naatpadu theral song

    100 இயக்குனர், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கவிஞர் வைரமுத்து. நாட்படு தேறல் என்ற தலைப்பில் இந்த பாடல்கள் உருவாக்கப்பட்டு, வாரம் ஒரு பாடல் வீதம் வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்த ஒவ்வொரு பாடலும் ஒரு மையக்கருத்தை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பல பிரபலமான இசையமைப்பாளர்கள், பிரபல பாடகர்கள் ஆகியோர் வைரமத்துவின் வரிகளில் உருவாக்கப்படும் பாடல்களை பாடி வருகிறார்கள்.

    இதுவரை கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டன. நாட்படு தேறல் பாடலின் வீடியோக்கள் பலவும் யூட்யூப்பில் செம வைரலாகி, பல லட்சம் பார்வைகளை அள்ளி வருகிறது.

    தற்போது 'நாட்படு தேறல்' தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை மதயானைக்கூட்டம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ளார்.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் கூறுகையில், "நாட்படு தேறல் தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிபேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள். இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம்" என்றார்.

    English summary
    Madhayanai kootam director vikram sukumaran gets chance to direct Vairamuthu's Naatpadu theral. vikram sukumaran thanked vairamuthu for giving this opportunity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X