எஸ் ஜே சூர்யா படத்தில் என்ன கதை இருக்குன்னு விக்ரமன் கேட்டார்... நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்

Recommended Video

நாய் பின்னாடியே வந்துருச்சு ! அந்த அளவு Connect| 777 Charlie | SJ Surya Speech | Karthik #kollywood

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது

இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வரும் விஜய் இடம் இயக்குனர் விக்ரமன் எஸ் ஜே சூர்யா படத்தில் என்ன கதை இருக்குன்னு நடிக்க சம்மதித்தீர்கள் என்று கேட்டதாக விஜய் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

பல மொழிகளிலும் சூப்பர் ஹிட்

பல மொழிகளிலும் சூப்பர் ஹிட்

மாஸ்டர் கொடுத்த மிக பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களிலும் பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை அள்ளி வருகிறது இந்த நிலையில் இயக்குனர் நேல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

கடும் விமர்சனத்திற்கு மத்தியிலும் வெற்றி

கடும் விமர்சனத்திற்கு மத்தியிலும் வெற்றி

நெல்சனின் வழக்கமான காமெடி விருவிருப்பான கதைக்கு தேவையான மாஸ் காட்சிகள் என அனைத்தும் இந்த படத்தில் நிரம்பியிருக்க பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து கலக்கியிருப்பார். விடிவி கணேஷ் யோகிபாபுவின் கிங்ஸ்லி என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் கடும் விமர்சனத்திற்கு மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது

விஜய் 66

விஜய் 66

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது விஜய் 66 ஆவது படம் என தற்போதைக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இயக்குனர் இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

என்ன கதை இருக்குன்னு நடிக்க சம்மதித்தீர்கள்

என்ன கதை இருக்குன்னு நடிக்க சம்மதித்தீர்கள்

இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்த படத்தை பார்த்து விட்டு இயக்குனர் விக்ரமன் விஜயிடம் குஷி படத்தில் என்ன கதை இருக்குன்னு என நடிக்க சம்மதித்தீர்கள் என கேட்டாராம் அதற்கு விஜய்.. எஸ் ஜே சூர்யான்னு ஒருத்தர் இருக்காரு அவர் கதை சொல்றதுல கிங்.. கதை அப்படி நரேட் பண்ணுவாரு.. அவரு கதையை சொன்ன விதத்தில்தான் மயங்கி விட்டேன் அத வச்சு அந்த படத்தை பண்ணினேன் என விஜய் கூறியதாக இசை பட விழாவில் விஜய் பேசியுள்ள வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X