தேவயானி கணவரால்தான் எனது உடம்பு அப்படி ஆனது.. விக்ரமன் ஓபன் டாக்.. குருநாதரே இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஜகுமாரன் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கியிருக்கிறார். இடையில் சில படங்களில் நடித்தாலும் அதனை அவர் தொடரவில்லை. அதேசமயம் தேவயானி நடித்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க அண்மைக்காலமாக ராஜகுமாரன் கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் அவருக்கு எதிரான கருத்துக்களை எழுப்ப தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவரது குருநாதர் விக்ரமன் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ராஜகுமாரன். அவரின் ஆஸ்தான உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த அவர்; சூர்யவம்சம் படத்தில் ஒரு காமெடி சீனில் தலைகாட்டி ஃபேமஸ் ஆனார். விக்ரமனிடம் வேலைகளை கற்றுக்கொண்டு அஜித், பார்த்திபன், தேவயானி உள்ளிட்டோரை வைத்து நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். தனது குருநாதர் ஸ்டைலில் முதல் படத்தை எடுத்திருந்தாலும், அது ஓரளவுக்கு வரவேற்பை பெறவே செய்தது.

தேவயானியுடன் காதல்: முதல் படம் எடுத்தபோதே நடிகை தேவயானியை காதலிக்க ஆரம்பித்தார் ராஜகுமாரன். இரண்டு பேரின் காதலுக்கும் தேவயானியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. இருந்தாலும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்த தேவயானி அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணம் நடந்தபோது அனைவருமே ஆச்சரியம்தான் பட்டார்கள். திருமண வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது.
மகளும் ஃபேமஸ்: திருமணம் செய்த ராஜகுமாரன் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிட்டார். அதேசமயம் தேவயானி பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் இரண்டாவது மகளான இனியா தனியார் சேனலின் பாடல் தொடர்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இயக்கத்திலிருந்து ஒதுங்கிய ராஜகுமாரன் சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் அது அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
ராஜகுமாரன் ட்ரெண்டிங்: சூழல் இப்படி இருக்க சமீப காலமாக ராஜகுமாரன் அதிக பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி ஒரு பேட்டியில் பேசியபோது இயக்குநர் மகேந்திரன் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் அவர் பேசியது பெரிய அளவில் ட்ரோலை சந்தித்தது. அவர் தன் இஷ்டத்துக்கு பேசி தேவயானியின் பெயரை கெடுக்கிறாரே என்று கழுவி கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த விவகாரம் பற்றி தேவயானி எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை.
விக்ரமன் பேட்டி: இந்நிலையில் ராஜகுமாரன் பற்றி அவரது குருநாதர் விக்ரமன் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ராஜகுமாரன் வீட்டிலிருந்து சிக்கன் எல்லாம் கொடுத்துவிடுவார்கள். அவர் வீட்டு தோசையும் அருமையாக இருக்கும். அதை கன்னாபின்னாவென்று சாப்பிட்டு என் உடலில் சர்க்கரை ஏறியதுதான் மிச்சம். ஒருமுறை மருத்துவமனையில் என்னை அனுமதித்தார்கள். அப்போதெல்லாம் எனது மகன் ராஜகுமாரனை அங்கிள் அங்கிள் என்று கூப்பிடுவான். அந்த நேரத்தில் அவர் ரொம்பவே உதவியாக இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











