HBD Nambiar.. விஜய் பட இயக்குநரை ஓடவிட்ட எம்.என். நம்பியார்.. ஏன் தெரியுமா?

சென்னை: விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் நடித்தபோது எம்.என்.நம்பியார் செய்த சேட்டைகள் குறித்து இயக்குநர் விக்ரமன் பகிர்ந்திருக்கும் விஷயங்கள்.

தமிழ் சினிமா எத்தனையோ வில்லன்களை கண்டிருக்கிறது. ஆனால் எம்.என்.நம்பியார் வில்லன்களில் தனித்துவமானவர். சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு தனது முகபாவனைகளாலும், உடல் மொழியாலும் பார்ப்பவர்களை பதைபதைக்க வைப்பவர் அவர். எம்ஜிஆருக்கு நிரந்தர வில்லன் என்று பெயர் எடுத்த நம்பியாரை ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட வில்லனாகவே பார்த்தனர். அந்த அளவுக்கு திரையில் ஆளுமை செலுத்தியவர் நம்பியார்.

எம்.என்.நம்பியார் வரலாறு

எம்.என்.நம்பியார் வரலாறு

மாஞ்சேரி நாராயண நம்பியார் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார். தனது எட்டாவயது வயதில் தந்தையை இழந்த நம்பியார் ஊட்டியில் குடியேறினார். நம்பியாருடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அவர்களில் அண்ணனும் உயிரிழந்துவிட்டார். ஊட்டியில் படிக்கும்போது நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட நாடக குழுவில் இணைந்தார் நம்பியார்.

சமையல் உதவியாளரான நம்பியார்

சமையல் உதவியாளரான நம்பியார்

நாடக குழுவில் இணைந்தாலும் எடுத்ததும் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து அதே குழுவில் சமையல் உதவியாளராக இருந்தார். பின்னர் நாடகக் கலையை கற்றுக்கொண்டு மூன்று ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க ஆரம்பித்தார். முதல் நாடக அரங்கேற்றத்திலேயே தனது நடிப்பு திறமையை காண்பித்த நம்பியாருக்கு பலரும் ரசிகர்களாகினர்.

சினிமாவில் நுழைந்த எம்.என்.நம்பியார்

சினிமாவில் நுழைந்த எம்.என்.நம்பியார்

வித்யாபதி படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த நம்பியாருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. குறிப்பாக ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் நடித்தபோது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து அசத்தினார் நம்பியார். இதனால் தொடர்ந்து எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் எம்ஜிஆருக்கு அவர் வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக எம்ஜிஆர் Vs நம்பியார் என்ற நிலை உருவானது.

குணச்சித்திர வேடம் ஏற்ற நம்பியார்

குணச்சித்திர வேடம் ஏற்ற நம்பியார்

காலப்போக்கில் வில்லன் வாய்ப்புகள் குறைய உடனடியாக தனது ரூட்டை மாற்றிய நம்பியார் குணச்சித்திர வேடங்கள் ஏற்க ஆரம்பித்தார். வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி தனது முத்திரையை பதித்தாரோ குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையை பதித்தார். அப்படி அவர் நடித்த எஜமான், தூறல் நின்னு போச்சு, சேதுபதி ஐபிஎஸ் போன்ற படங்களில் அவரது குறும்புத்தனமான நடிப்பு வெகுவாகவே ரசிக்கப்பட்டது. நம்பியார் குணச்சித்திர வேடம் ஏற்ற படங்களில் முக்கியமான படம் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம். அதில் நாகேஷுடனான உரசலையும், பழைய நட்பின் பாசத்தையும் வெகு இயல்பாக தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்தார்.

பூவே உனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நம்பியாரின் சேட்டைகள்

பூவே உனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நம்பியாரின் சேட்டைகள்

இந்தச் சூழலில் பூவே உனக்காக படத்தின் இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியில் நம்பியார் குறித்து பேசிய அவர், "பூவே உனக்காக படத்தில் நம்பியார் சார் ரொம்பவே ஜாலியாக இருப்பார். என்னை கூப்பிட்டு வைத்து நிறைய ஏ ஜோக்குகள் சொல்வார். நான் ஆளை விடுங்க சார் என்று ஓடுவேன். இருந்தாலும் என்னை துரத்தி பிடித்து மீண்டும் சொல்வார். அவர் அப்படி ஜோக்குகள்தான் சொல்வாரே தவிர எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்.

நம்பியார் சாப்பாட்டை சாப்பிட்டு அரண்ட விக்ரமன்

நம்பியார் சாப்பாட்டை சாப்பிட்டு அரண்ட விக்ரமன்

நம்பியார் சாருக்கு அவரது மனைவிதான் எப்போதும் சமைப்பார். ஒருமுறை ஷூட்டிங்கின்போது அவரிடம் சென்று, 'என்ன சார். தயாரிப்பு நிறுவனம்தான் சாப்பாடு கொடுக்கிறார்களே. அதுவும் நல்லாத்தானே இருக்கு. நீங்க மட்டும் ஸ்பெஷலா சாப்டுறீங்க. எங்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது என்றேன். அதற்கு அவர் இல்லை இந்த சாப்பாட்டை என்னால் மட்டும்தான் சாப்பிட முடியும் என்றார்.

அடுத்த நாள் அதேபோல் அவர் சாப்பிட அமரும்போது என்னை அழைத்து அருகில் அமரவைத்து இந்த சாப்பாட்டை சாப்பிடுங்கள் என்றார். நானும் ஆர்வமாக சாப்பிட்டேன். ஆனால் அந்த சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் என எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட சாப்பாட்டைத்தான் அவர் சாப்பிட்டிருக்கிறார். ஒரு துறவி போல்தான் அவர் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். சாமி என்றுதான் அவரை அழைப்பார்கள். அப்படி அழைப்பதற்கு முழு தகுதியும் உடையவர் நம்பியார்" என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X