5 வருஷமா முடங்கிப்போன வாழ்வு.. சிகிச்சைக்கு உதவிய முதல்வர்.. கண்கலங்கிய இயக்குநர் விக்ரமன்!

சென்னை: படுத்தப்படுக்கையாக இருக்கும் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு இயக்குநர் விக்ரமன் நன்றி தெரிவித்துள்ளார்.

பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்.

Director Vikraman thanked Tamil Nadu Chief Minister Stalin for helping his wifes medical expenses

தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநரின் மனைவி ஜெயப்பிரியா ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார்.

இயக்குநர் விக்ரமனின் மனைவி: அண்மையில் ஜெயப்பிரியா, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு முதுகு வலி இருந்ததால் அப்ரேஷன் செய்தேன். ஆனால், அந்த ஆப்ரேஷன் தவறாகி விட்டதால், கடந்த ஐந்து வருடமாக படுத்த படுக்கையாகவே இருக்கிறேன்.

படுத்த படுக்கையானேன்: தவறான ஆப்ரேஷன் செய்த மருத்துவமனை எனக்கு எந்தவிதமான உதவியை செய்யவும் முன்வரவில்லை.என் கணவர் தான் இருக்கும் சொத்துக்களை விற்று என் மருத்துவ செலவுகளை செய்து வருகிறார். நான் இப்படி இருப்பதால், அவர் வீட்டை விட்டு வெளியில் கூட போகாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார் என்று கண்ணீர் வீட்டு பேட்டி அளித்திருந்தார்.

Director Vikraman thanked Tamil Nadu Chief Minister Stalin for helping his wifes medical expenses

மருத்துவ உதவி: இந்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து தமிழக அரசு அவருக்கு மருத்துவ உதவி செய்ய முன்வந்துள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்த இயக்குநர் விக்ரமன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வீட்டுக்கு வந்து என் மனைவியை பார்த்தார். இவருடன் பல மூத்த மருத்துவர்கள் என் மனைவியை பரிசோதித்து விட்டு அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அனைவருக்கும் நன்றி: இக்கட்டான இந்த நேரத்தில் தானாக உதவ முன்வந்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய மனைவி குணமாக வேண்டும் அது தான் எனக்கு முக்கியம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X